இந்­திய பொரு­ளா­தாரம்6.5 சத­வீ­த­மாக உயரும்’இந்­திய பொரு­ளா­தாரம்6.5 சத­வீ­த­மாக உயரும்’ ... எதிர்­பார்ப்பை நிறை­வேற்­று­வாரா நரேந்­திர மோடி? எதிர்­பார்ப்பை நிறை­வேற்­று­வாரா நரேந்­திர மோடி? ...
ஆதாய பங்­கு­களை குறி வைக்கும்அன்­னிய நிதி நிறு­வ­னங்கள்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

18 மே
2014
04:00

மும்பை:அன்­னிய நிதி நிறு­வ­னங்கள், விலை­யேற வாய்ப்­புள்ள பங்­கு­களை குறி­வைத்து, முத­லீடு செய்து வரு­கின்­றன. ஆனால், உள்­நாட்டு நிதி நிறு­வ­னங்­களோ, அத்­த­கைய பங்­கு­களை விற்­பனை செய்து வரு­கின்­றன.வங்கி:உதா­ர­ண­மாக, தனியார் வங்கி பங்­கு­களின் சந்தை மதிப்பு, 2009ம் ஆண்டு மார்ச்சில், 3,430 கோடி டால­ராக (2,05,800 கோடி ரூபாய்) இருந்­தது. இது, 2013ம் ஆண்டில், 4,480 கோடி டால­ராக (2,68,800 கோடி ரூபாய்) உயர்ந்­துள்­ளது.அதனால், அன்­னிய நிதி நிறு­வ­னங்கள், தனியார் வங்­கிகள், தொழில்­நுட்ப நிறு­வ­னங்கள், வங்கி சாரா நிதி நிறு­வ­னங்கள் ஆகி­ய­வற்றின் பங்­கு­களில் அதிக முத­லீடு செய்து வரு­கின்­றன.அதே சமயம், உள்­நாட்டு நிறு­வ­னங்கள், நுகர்வோர் பொருட்கள், எண்ணெய் மற்றும் எரி­வாயு, பொறி­யியல் சாத­னங்கள், பொதுத் துறை வங்­கிகள், உலோக நிறு­வ­னங்கள் ஆகி­ய­வற்றின் பங்­கு­களில் அதிக அளவில் முத­லீடு செய்­கின்­றன.
கடந்த ஓராண்­டாக, அன்­னிய நிதி நிறு­வ­னங்கள், நுகர்­பொருள் துறையை சேர்ந்த, நெஸ்லே மற்றும் பிரிட்­டா­னியா நிறு­வன பங்­கு­களில் தொடர்ந்து முத­லீடு செய்து வரு­கின்­றன.அதே­ச­மயம், சென்ற ஆண்டு டிசம்பர் வரை இதர நிறு­வ­னங்­களில் மேற்­கொண்ட முத­லீட்டை, நடப்­பாண்டு, ஜன., முதல் மார்ச் வரை­யி­லான காலத்தில் குறைத்­தன.ஆனால், உள்­நாட்டு நிதி நிறு­வ­னங்கள், கடந்த ஓராண்­டாக, நுகர்­பொருள் நிறு­வ­னங்­க­ளான நெஸ்லே, பிரிட்­டா­னியா, ஜோதி லேப்ஸ், இமாமி போன்ற நிறு­வனப் பங்­கு­களை தொடர்ந்து விற்­பனை செய்து வரு­கின்­றன. அதே சமயம், கடந்த ஓராண்­டாக, ஐ.டி.சி., ஜி.சி.பி.எல்., தாபர் ஆகிய நிறு­வ­னங்­களில் பங்கு முத­லீட்டை அதி­க­ரித்­துள்­ளன.
இந்த வகையில், உள்­நாட்டு நிதி நிறு­வ­னங்கள், சென்ற 2013–14ம் நிதி­யாண்டில், நிகர அளவில், 890 கோடி டாலர் மதிப்­புள்ள பங்­கு­களை விற்­பனை செய்­துள்­ளன. இதில், இறுதி காலாண்டில் (ஜன.,–மார்ச்) மட்டும், 220 கோடி டாலர் மதிப்­புள்ள பங்­குகள் விற்­கப்­பட்­டுள்­ளன.இதே காலத்தில், அன்­னிய நிதி நிறு­வ­னங்கள், முறையே, 1,370 கோடி டாலர் மற்றும், 400 கோடி டாலர் அள­விற்கு பங்­கு­களில் முத­லீடு செய்­துள்­ளன.எச்சரிக்கை:அன்­னிய நிதி நிறு­வ­னங்கள், முத­லீ­டு­களை, எந்த சம­யத்தில் மொத்­த­மாக திரும்ப பெறும் என்று உறு­தி­யாக கூற முடி­யாது. அத்­த­கைய சூழலில், பங்கு விலை வீழ்ச்­சியால் பாதிக்­கப்­ப­டு­வதை தவிர்க்க, இந்­திய நிதி நிறு­வ­னங்கள், மிகுந்த எச்­ச­ரிக்­கை­யுடன், அத்­த­கைய பங்­கு­களில் முத­லீடு செய்­கின்­றன என, ஆய்­வாளர் ஒருவர் கூறினார்.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)