தங்கம் விலை ரூ.32 குறைந்ததுதங்கம் விலை ரூ.32 குறைந்தது ... ஓய்வு பெறும் நாளன்றே ஓய்வூதிய ஆணை மத்திய அரசு பணியாளர்களுக்கு புதிய நடைமுறை ஓய்வு பெறும் நாளன்றே ஓய்வூதிய ஆணை மத்திய அரசு பணியாளர்களுக்கு புதிய ... ...
தங்கத்திற்கான தேவை 190 டன்னாக குறைந்தது
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

22 மே
2014
01:28

மும்பை:நடப்பாண்டு ஜனவரி முதல் மார்ச் வரையிலான காலாண்டில், உள்நாட்டில் தங்கத்திற்கான தேவை, அளவின் அடிப்படையில், 26 சதவீதம் சரிவடைந்து, 190.30 டன்னாக குறைந்துள்ளது.இது, 2013ம் ஆண்டின், இதே காலாண்டில், 257.50 டன்னாக இருந்தது.
ஆபரணங்கள்:மதிப்பீட்டு காலாண்டில், மதிப்பின் அடிப்படையில், தங்கத்திற்கான தேவை, 33 சதவீதம் வீழ்ச்சி கண்டு, 73,184 கோடியிலிருந்து, 48,853 கோடி ரூபாயாக சரிவடைந்து உள்ளது.இந்தியாவில் ஒட்டு மொத்த தங்க நகைகளுக்கான தேவை, 9 சதவீதம் குறைந்து, 159.50 டன்னிலிருந்து, 145.60 டன்னாக சரிவடைந்துள்ளது.
மதிப்பின் அடிப்படையில், தங்கத்திற்கான தேவை, 18 சதவீதம் குறைந்து, 45,331 கோடியிலிருந்து, 37,378 கோடி ரூபாயாக உள்ளது.முதலீட்டு திட்டங்களின் கீழ், தங்கத்திற்கான தேவை,54 சதவீதம் வீழ்ச்சி கண்டு, 98 டன்னிலிருந்து, 45 டன்னாக சரி வடைந்துள்ளது. இது, மதிப்பின் அடிப்படையில், 59 சதவீதம் குறைந்து, 27,852 கோடியிலிருந்து, 11,475 கோடி ரூபாயாக வீழ்ச்சி கண்டுள்ளது.
மத்திய அரசு, நடப்பு கணக்கு பற்றாக்குறையை கட்டுப்படுத்தும் வகையில், தங்கம் இறக்குமதி மீதான சுங்க வரியை, படிப்படியாக, 4 சதவீதத்திலிருந்து, 10 சதவீதமாக அதிகரித்தது.இதன் காரணமாக தங்கம் இறக்குமதி குறைந்து, அதற்கான தேவையிலும் சுணக்கம் ஏற்பட்டுள்ளது. அதேசமயம், ஐக்கிய அரபு நாடுகளில், தங்கத்திற்கான தேவை, 13 சதவீதம் அதிகரித்துள்ளது.
இதற்கு அந்நாடுகளில் இருந்து, இந்தியாவிற்கு, சட்ட விரோதமாக தங்கம் கடத்தி வருவது தான் காரணம் என்று கருதப்படுகிறது.நடப்பாண்டில், இந்தியாவில் தங்கத்திற்கான தேவை, 900–1,000 டன் என்ற அளவில் இருக்கும் என, உலக தங்க கவுன்சில் (டபிள்யூ.ஜி.சி.,)–ன் நிர்வாக இயக்குனர் (இந்தியா) சோமசுந்தரம் தெரிவித்தார்.
உலகம்:மதிப்பீட்டு காலாண்டில், உலகளவில் தங்கத்திற்கான தேவை, மாற்றம் எதுவுமின்றி, 1,075 டன் என்ற அளவிலேயே உள்ளது.கடந்த ஆண்டுடன் ஒப்பிடும் போது நடப்பாண்டில், சர்வதேச சந்தையில் தங்கம் விலை குறைந்துள்ளது. இதனால், கணக்கீட்டு காலாண்டில், சர்வதேச அளவில், தங்க ஆபரணங்களுக்கான தேவை, 3 சதவீதம் உயர்ந்து, 571 டன்னாக அதிகரித்துள்ளது.
நாணயங்கள்:குறிப்பாக, சீனாவில் மட்டும், இதற்கான தேவை, 10 சதவீதம் உயர்ந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.இந்தோனேஷியா மற்றும் வியட்நாம் நாடுகளிலும், தங்கத்திற்கான தேவை முறையே, 9 சதவீதம் மற்றும் 3 சதவீதம் என்ற அளவில் அதிகரித்துஉள்ளது. அதே சமயம், உலகளவில், தங்க நாணயங்கள் மற்றும் கட்டிகளுக்கான தேவை, 39 சதவீதம் வீழ்ச்சி கண்டு, 283 டன்னாக குறைந்துள்ளது.மதிப்பீட்டு காலாண்டில், ரிசர்வ் வங்கி, 122 டன் தங்கத்தை வாங்கியுள்ளது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)