தங்கம் விலை ரூ.168 குறைந்ததுதங்கம் விலை ரூ.168 குறைந்தது ... ஆபரண தங்கம் விலை சவரனுக்கு ரூ.168 குறைவு ஆபரண தங்கம் விலை சவரனுக்கு ரூ.168 குறைவு ...
வர்த்தகம் » சந்தையில் புதுசு
இசூஸீ நிறுவனம் அறிமுகம் செய்யும் புதிய பிக்-அப் டிரக் டிமேக்ஸ்-ஐ!
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

29 மே
2014
15:13

உலகெங்கும் மிக அதிகமாக விற்பனையாகும் பிக்-அப் ட்ரக்குகளுள் ஒன்றான, டிமேக்ஸ் தொகுப்பினை, இந்தியாவிலேயே தயாரித்துள்ளது இசூஸீ நிறுவனம். சென்னையில், கடந்த வாரம் அறிமுகம் செய்யப்பட்ட டிமேக்ஸ்-ஐ மூன்று மாடல்களை உள்ளடக்கி வருகிறது. டிமேக்ஸ் சிங்கிள் கேப் தட்டையான டெக் (சுமையேற்றும் பகுதி) கொண்டு வருகிறது. டிமேக்ஸ் ஸ்வேஸ் கேப் என்பது தட்டையான டெக் மற்றும் வளைவான டெக் என்ற இரண்டு தேர்வுகளில் கிடைக்கிறது.
சிறிய மற்றும் நடுத்தர தொழில் வர்த்தக நிறுவனங்களை, தங்கள் வாடிக்கையாளர்களாக குறிவைத்து, இத்தொகுப்பை கொண்டு வருகிறது இசூஸீ. இவை முறையே 5,99,000, 6,19,000 மற்றும் 7,09,000 என்ற விலைகளில் (எக்ஸ் ஷோரூம் - சென்னை) கிடைக்கும். இந்த திறன் மிகுந்த பிக் அப் ட்ரக்குகள் இன்ஜின் 2499 சிசி திறன் கொண்டே 4 சிலிண்டர் இன்டர்கூல்ட் டர்போசார்ஜட் டீசன் இன்ஜினாகும். இது 3600 ஆர்பிஎம்மில் 294 என்எம் இழுவிசையையும் வெளிப்படுத்துகிறது. 5 வேக மானுவல் ட்ரான்ஸ்மிஷன் கொண்டு இயங்கும் இந்த இன்ஜின் 1.2 டன் சுமையை அனாயசமாக ஏற்றிச்செல்ல உதவுகிறது.
நல்ல ஸ்டைலான வெளிப்புற தோற்றம் கொண்டுள்ள டிமேக்சின் உள் அமைப்பு ஓட்டுனருக்கு ஒரு எஸ்.யு.வி.,யில் பயணம் செய்யும் உணர்வை தருகிறது. தாராள இடவசதியுடன், 1.5 அடியுள்ள ஓட்டுனருக்கு பின்புறமுள்ள, கேபிள் பகுதியில் உடையக்கூடிய பொருட்களை பத்திரமாக ஏற்றிச் செல்லலாம். பவர் ஸ்டியரிங், பவர் வின்டோஸ், சூடும், குளிர்ச்சியும் தரக்கூடிய "ஏசி' மற்றும் சிறப்பான பாதுகாப்பு அம்சங்கள் இதில் உள்ளது. வேளாண்மை, சில்லரை விற்பனை, பால் பொருட்கள், பொறியியல் உற்பத்தி போன்ற சிறிய மற்றும் நடுத்தர தொழில் துறைகளின் வணிக ரீதியான பயன்பாட்டிற்கு ஏற்ற வகையில் உள்ளது டிமேக்ஸ்.

Advertisement

மேலும் சந்தையில் புதுசு செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)