பதிவு செய்த நாள்
05 ஜூன்2014
15:06

* ஹோண்டாவின் புதிய எம்பிவி மொபீலியோ ஜூலை மாதத்தில் அறிமுகப்படுத்தப்படும் என்று, அதிகார பூர்வமாக அறிவித்துள்ளது. பிரையோவின் பிளாட்பார்மில் கட்டப்படும் இந்த ஏழு இருக்கை கொண்ட பெட்ரோல் மற்றும் டீசல் இன்ஜின் தேர்வுகளில் கிடைக்கும்.
* மஹிந்திரா - மஹிந்திரா லிமிடெட்டின் விவசாய கருவிகள் பிரிவு தங்களின் விற்பனை மே, 2014இல் சிறப்பாக இருந்ததாக தெரிவித்துள்ளனர். மே மாதம் மட்டும் 23,132 வாகனங்களை விற்றுள்ளதாக இந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
* யமஹா மோட்டார் இந்தியா லிமிடெட் தங்களின் உள்நாட்டு விற்பனையில் கடந்த மே மாதம், 40 சதவீதம் வளர்ச்சியை அடைந்ததாக தெரிவித்துள்ளது. மே, மாதம் மட்டும் 47,680 வாகனங்கள் உள்நாட்டு சந்தையிலும், 19,440 வாகனங்களை ஏற்றுமதியும் செய்துள்ளது யமஹா. அல்பா ஸ்கூட்டரின் வாடிக்கையாளர் வரவேற்பும் இந்த விற்பனை வளர்ச்சிக்கு காரணம் என்று யமஹா தெரிவிக்கிறது.
* பெங்களூரின் ஏசிடிடி என்ற நிறுவனத்தின் "கோ க்ரீன் போவ்' என்ற திட்டத்தின் விளைவாய் சுற்றுச்சூழலுக்கு மாசு விளைவிக்காத மின்சார இருசக்கர வாகனத்தை உருவாக்கியுள்ளது. ஒரு சார்ஜில் அதாவது 8 முதல் 10 ரூபாய் விலையில், 120 கி.மீ., செல்லக்கூடியதாக இந்த வாகனம் இருக்கும் என தெரிகிறது.
மேலும் ஆட்டோமொபைல் செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|