பதிவு செய்த நாள்
05 ஜூன்2014
15:11

பி.எம்.டபிள்யூ., இந்தியா கடந்த வாரத்தில், தங்களின் புதிய பி.எம்.டபிள்யூ., X5 மாடலை அறிமுகப்படுத்தியுள்ளது. ஸ்போர்ட்ஸ் ஆக்டிவிட்டி, வெஹிக்கல் (எஸ்.ஏ.வி.,) என்றழைக்கப்படும் இந்த மாடல், அதிக இடவசதியும், இணையற்ற சொகுசு அம்சங்களும், அதிக ஓட்டும் சுகத்தையும் அளிக்கக்கூடியதாய் உள்ளது.
மூன்றாவது தலைமுறையும், உலகளவில் வெற்றிபெற்ற மாடலுமான, பி.எம்.டபிள்யூ., X5 X ட்ரைவ், 30 டி சென்னையில் உள்ள அவர்களின் உற்பத்தி கூடத்தில், டீசல் தேர்வாக தயாரிக்கப்பட்டு, ஜூன் 2014 முதல், நாடு முழுவதும் விற்பனை செய்யப்படஉள்ளது.
எஸ்.ஏ.வி., என்ற பிரிவை, முதலில் அறிமுகப்படுத்தியது பி.எம்.டபிள்யூ., X5 மூலமாகத்தான். ஆல் வீல் ட்ரைல் வாகனங்களுக்கு ஒரு புதிய பரிமாணத்தை வழங்குவதாக, X5 இருக்கிறது. புதிய பி.எம்.டபிள்யூ., X5 இன் கண்கவரும் வளைவுகளும், அதிகாரத்தை பறைசாற்றும் ஆளுமை வடிவமைப்பு, இதன் வெளித்தோற்றத்தை கம்பீரமாக்குகிறது.
இதன் உட்புறம், அதிக இடவசதி, ஐட்ரைவ் டச் கன்ட்ரோலர் ஓட்டுனர் கையாள சுலபமாக இருப்பது, வசதியான உயர் ரக துணியால் ஆன வசதிக்கேற்ப மாற்றிக்கொள்ளக்கூடிய இருக்கைகள் போன்றவைகளுடன் சிறப்பாக உள்ளது. இதன் இன்ஜின், ட்வின்பவர் டர்போ 6 சிலிண்டர் இன்-லைன் டீசல் இன்ஜினாகும். இந்த 3.0 லிட்டர் டீசல் இன்ஜின், 258 எச்பி சக்தியையும், 560 என்எம் இழுவிசையையும் அளிக்கிறது. 0-100 கி.மீ., வேகத்தை, 6.9 நொடிகளில் அடைவதுடன், அதிகபட்ச வேகமாக, 230 கி.மீ., மணிக்கு செல்லக்கூடியதாய் உள்ளது.
இதன், 8 வேக ஸ்போக்ட் ஆட்டோ ட்ரான்ஸ்மிஷன், மென்மையான கியர் மாற்றத்தை அளிக்கிறது. இன்ஜினுடன் மிக இணக்கமாக இணைந்து செயல்படுகிறது இதன் ட்ரான்ஸ் மிஷன். பி.எம்.டபிள்யூ., X ட்ரைவ் தொழில்நுட்பம் ஓட்டும் திறனை எல்லா சக்கரங்களுக்கு சீராக பரவவிட்டு, ஸ்திரமான பயணத்தை எல்லா வகையான சாலைகளிலும் அளிக்கிறது. இவற்றை தவிர, சிறந்த பாதுகாப்பு அம்சங்கள் மற்றும் சஸ்பென்ஷன் முறை கொண்டு இயங்கும் பி.எம்.டபிள்யூ., ஐந்து மெட்டாலிக் நிறங்களிலும், ஆல்பைன் வொயிட் என்ற ஒரு நான்-மெட்டாலிக் நிறத்திலும் கிடைக்கும்.
மேலும் ஆட்டோமொபைல் செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|