ஆப­ரண தங்கம் விலைசவ­ர­னுக்கு ரூ.16 உயர்வுஆப­ரண தங்கம் விலைசவ­ர­னுக்கு ரூ.16 உயர்வு ... ரூபாயின் மதிப்பில் சிறு ஏற்றம் - ரூ.59.27 ரூபாயின் மதிப்பில் சிறு ஏற்றம் - ரூ.59.27 ...
சர்க்­கரை ஏற்­று­ம­திக்கு ஊக்கத் தொகை உய­ரு­கி­றது:மீண்டும் டன்­னுக்கு ரூ. 3,300 கிடைக்கும்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

11 ஜூன்
2014
00:26

மும்பை:சர்க்­கரை ஏற்­று­ம­திக்­கான ஊக்கத் தொகையை, மீண்டும் டன்­னுக்கு, 3,300 ரூபா­யாக நிர்­ணயம் செய்ய மத்­திய அரசு திட்­ட­மிட்­டுள்­ளது.உள்­நாட்டில் சர்க்­கரை விலையை கட்­டுக்குள் வைக்கும் நோக்கில், அதன் ஏற்­று­ம­திக்கு, ஊக்கத் தொகை வழங்கும் திட்டம் நடை­மு­றையில் உள்­ளது.
முந்தைய அரசு:இதன்­படி, ஒரு டன் சர்க்­க­ரைக்கு வழங்­கப்­பட்டு வந்த, 3,300 ரூபாய் ஊக்கத் தொகை, கடந்த ஏப்ரல், மே மாதங்­களில், 2,277 ரூபா­யாக குறைக்­கப்­பட்­டது.வரும் செப்­டம்­பரில் முடியும், 2013–14ம் சர்க்­கரை பரு­வத்­துடன், இந்த ஊக்கத் தொகை வழங்கும் திட்­டத்தை கைவிட, முந்­தைய அரசு திட்­ட­மிட்­டி­ருந்­தது.இந்­நி­லையில், கரும்பு விவ­சா­யி­களின் நிலு­வையை வழங்­கவும், உள்­நாட்டில் சர்க்­கரை விலை அதிகம் வீழ்ச்சி காணாமல் தடுக்­கவும், சர்க்­கரை ஏற்­று­ம­திக்­கான ஊக்கத் தொகையை உயர்த்த வேண்டும் என, இந்­திய சர்க்­கரை ஆலைகள் கூட்­ட­மைப்பு வலி­யு­றுத்தி வந்­தது.
இதை­ய­டுத்து, மத்­திய உணவு அமைச்சர் ராம் விலாஸ் பஸ்வான் தலை­மையில் நடை­பெற்ற கூட்­டத்தில், வேளாண், ஊரக மேம்­பாடு உள்­ளிட்ட துறை­களை சேர்ந்த அமைச்­சர்கள் கலந்து கொண்­டனர்.அப்­போது, கரும்பு விவ­சா­யி­களின் துயர் துடைக்­கவும், சர்க்­கரை உற்­பத்­தியில் ஆலைகள் எதிர்­கொள்ளும் இழப்பை குறைக்­கவும், பல்­வேறு ஆலோ­ச­னைகள் வழங்­கப்­பட்­டன.
அறிவிப்பு:இதை­ய­டுத்து, சர்க்­கரை ஏற்­று­ம­திக்­கான ஊக்கத் தொகையை, மீண்டும், டன்­னுக்கு 3,300 ரூபா­யாக உயர்த்­து­வது என, அரசு முடிவு செய்­துள்­ள­தாக கூறப்­ப­டு­கி­றது.மேலும், சென்ற பிப்­ர­வரி முதல், 2015ம் ஆண்டு செப்­டம்பர் வரை மொத்தம் 40 லட்சம் டன் சர்க்­க­ரையை ஏற்­று­மதி செய்­யவும், அது வரை ஊக்கத் தொகை திட்­டத்தை நடை­மு­றைப்­ப­டுத்­தவும், அரசு திட்­ட­மிட்­டுள்­ளது.இது குறித்த அதி­கா­ரப்­பூர்வ அறி­விப்பு விரைவில் வெளி­யாகும் என, அரசு அதி­காரி ஒருவர் தெரி­வித்தார்.
நடப்பு 2013–14ம் சர்க்­கரை பரு­வத்தின் துவக்­கத்தில், 92.98 லட்சம் டன் சர்க்­கரை கையி­ருப்பில் இருந்­தது. இத்­துடன், 214 லட்சம் டன் சர்க்­கரை உற்­பத்தி மற்றும் ஒரு லட்சம் டன் மூலச்சர்க்­கரை இறக்­கு­மதி ஆகி­ய­வற்றை சேர்த்தால், மொத்தம், 307.98 லட்சம் டன் சர்க்­கரை, இருக்கும் என, மதிப்­பி­டப்­பட்­டுள்­ளது.இதே காலத்தில், சர்க்­க­ரைக்­கான தேவை, 240 லட்சம் டன்­னா­கவும், ஏற்­று­மதி, 20 லட்சம் டன்­னா­கவும் இருக்கும் என, கணிக்­கப்­பட்­டுள்­ளது.
இதை­ய­டுத்து, வரும், 2014–15ம் சர்க்­கரை பரு­வத்தின் துவக்­கத்தில், சர்க்­கரை கையி­ருப்பு, 48 லட்சம் டன்­னாக இருக்கும்.
ஏற்றுமதி:இது, உள்­நாட்டின் நான்கு மாத தேவையை பூர்த்தி செய்யக் கூடி­ய­தாக இருக்கும் என,தெரி­கி­றது. இது போன்ற சூழலில், ஊக்கத் தொகை குறைவால், சர்க்­கரை ஏற்­று­மதி சரி­வ­டைந்தால், அதன் விலை உள்­நாட்டில் மேலும் சரி­வ­டையும்.இது, கரும்பு விவ­சா­யி­க­ளுக்கு சர்க்­கரை ஆலைகள் வழங்க வேண்­டிய நிலுவை சுமையை அதி­க­ரிக்க செய்யும். இவற்­றை­யெல்லாம் கருத்தில் கொண்டு, மத்­திய அரசு, சர்க்­கரை ஏற்­று­ம­திக்­கான ஊக்கத் தொகையை உயர்த்த திட்­ட­மிட்­டுள்­ள­தாக கூறப்­ப­டு­கி­றது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)