ஆபரண தங்கம் விலைசவரனுக்கு ரூ.40 குறைவுஆபரண தங்கம் விலைசவரனுக்கு ரூ.40 குறைவு ... சர்க்கரை இறக்குமதி வரியை40 சதவீதமாக உயர்த்த முடிவு சர்க்கரை இறக்குமதி வரியை40 சதவீதமாக உயர்த்த முடிவு ...
சர்வதேச உருக்கு துறை உற்பத்தியில் இந்தியாவின் பங்களிப்பு 5 சதவீதம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

24 ஜூன்
2014
00:21

புதுடில்லி :சென்ற மே மாதத்தில், உலக நாடுகளின் ஒட்டு மொத்த உருக்கு உற்பத்தி, 14.10 கோடி டன்னாக உள்ளது.இதில், இந்தியாவின் பங்களிப்பு 5 சதவீதம் (70 லட்சம் டன்) என்ற அளவில் உள்ளது என, உலக உருக்கு கூட்டமைப்பு (டபிள்யூ.எஸ்.ஏ.,) தெரிவித்துள்ளது.
சீனாஅதேசமயம், சீனாவின் பங்களிப்பு, கிட்டத்தட்ட 50 சதவீதமாக அதாவது, 7.04 கோடி டன்னாக உள்ளது.மதிப்பீட்டு மாதத்தில், இந்தியாவின் உருக்கு உற்பத்தி, 1.6 சதவீதம் வளர்ச்சி கண்டுள்ள நிலையில், சீனாவில் இது, 2.6 சதவீதமாக உள்ளது.கணக்கீட்டு மாதத்தில், ஜப்பான் மற்றும் பிரேசில் நாட்டின் உருக்கு உற்பத்தி முறையே, 0.3 சதவீதம் மற்றும் 4.3 சதவீதம் சரிவடைந்து, 96 லட்சம் டன் மற்றும் 29 லட்சம் டன் என்ற அளவில் உள்ளன.
அதேசமயம், தென்கொரியாவின் உருக்கு உற்பத்தி, 11.4 சதவீதம் அதிகரித்து, 62 லட்சம் டன்னாக வளர்ச்சி கண்டுள்ளது. ரஷ்யா மற்றும் அமெரிக்காவில் இதன் உற்பத்தி முறையே, 0.6 சதவீதம் மற்றும் 1.4 சதவீதம் வளர்ச்சி கண்டு 61 லட்சம் டன் மற்றும் 75 லட்சம் டன் என்ற அளவில் உள்ளன.
ஐரோப்பா மற்றும் ஜெர்மனி (39 லட்சம் டன்), இத்தாலி (23 லட்சம்), பிரான்ஸ் (14 லட்சம்) மற்றும் ஸ்பெயின் (13 லட்சம் டன்) ஆகிய நாடுகளும் குறிப்பிடத்தக்க அளவிற்கு உருக்கு உற்பத்தியை மேற்கொண்டுள்ளன.சராசரிநடப்பாண்டு ஜனவரி முதல் மே வரையிலான ஐந்து மாத காலத்தில், உலக உருக்கு உற்பத்தி, 68.42 கோடி டன்னாக உள்ளது. இதில், இந்தியாவின் பங்களிப்பு, 3.46 கோடி டன் என்ற அளவில் உள்ளது.மதிப்பீட்டு காலத்தில், உலக உருக்கு உற்பத்தியின் சராசரி வளர்ச்சி, 2.4 சதவீதமாக உள்ள நிலையில், இந்தியாவில், இது, 1.9 சதவீதமாக உள்ளது என, டபிள்யூ.எஸ்.ஏ., மேலும் தெரிவித்துள்ளது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)