தங்கம் விலை ரூ.128 குறைந்ததுதங்கம் விலை ரூ.128 குறைந்தது ... லாரி வாடகை உயர்வால் அரிசி விலை கிடுகிடு... லாரி வாடகை உயர்வால் அரிசி விலை கிடுகிடு... ...
மத்திய பட்ஜெட்: அருண் ஜெட்லியும் 6 சவால்களும் : ‘ஆடு புலி ஆட்டம்’ ஆரம்பம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

08 ஜூலை
2014
00:27

புதுடில்லி: மந்தமான பொருளாதார வளர்ச்சி, பணவீக்க உயர்வு, நிதிப் பற்றாக்குறை போன்ற நெருக்கடியான சூழலில், நிதியமைச்சர் அருண் ஜெட்லி, வரும் 10ம் தேதி தாக்கல் செய்ய உள்ள மத்திய பட்ஜெட், மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.நாட்டின் முன்னேற்றத்திற்கு தடையாக உள்ள முக்கிய ஆறு பிரச்னைகளை, அருண் ஜெட்லி எப்படி சமாளிக்கப் போகிறார் என்ற ஆவலை வெளிப்படுத்தியுள்ள, பொருளாதார வல்லுனர்கள் குழு, அவற்றுக்கான தீர்வை வழங்கி உள்ளது.மானிய போர்: கடந்த 10 ஆண்டுகளாக, மத்திய அரசின் மானியச் சுமை குறிப்பிடத்தக்க அளவிற்கு அதிகரித்துள்ளது.
முந்தைய ஐ.மு., அரசின் கொள்கை திட்டங்களும், மானியச் சுமையை அதிகரிக்க துணை புரிந்தன. உர மானியம் மூலம் கிராமப்புற விவசாயிகளும், எரிவாயு மானியம் வாயிலாக, நகர்ப்புற நடுத்தர மக்களும் பயனடைகின்றனர். இந்நிலையில், தேசிய உணவு பாதுகாப்பு திட்டத்தை அமல்படுத்த வேண்டுமென்றால், மானியங்களை குறைக்க வேண்டும். தீர்வு: மானியம் முற்றிலுமாக நீக்கப்படும் வரை, எரிபொருள் விலையை படிப்படியாக உயர்த்தி வர வேண்டும். பொது பயன்பாட்டு சேவைகளில், அரசியலை கலக்காமல், விலையை கட்டுப்படுத்துவதற்கு, ஒய்.வி.ரெட்டி தலைமையிலான 14வது நிதி ஆணையத்தின் பரிந்துரைகளை பின்பற்றலாம். முதலீடுகளை ஈர்க்க வேண்டும்: இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி நிலைத்து நிற்க, அதிக அளவில் முதலீடுகளை ஈர்ப்பது அவசியம். தனியார் துறை நிறுவனங்களின் கடன் சுமை அதிகரித்துள்ளதால், நிதியுதவியில்லாமல், அவற்றின் விரிவாக்கத் திட்டங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. அரசு, செலவினங்களை குறைத்ததால், பொதுத் துறை நிறுவனங்களிலும் முதலீடு குறைந்துள்ளது. அடிப்படை கட்டமைப்பு துறையை மேம்படுத்த, அதிக மூலதனம் தேவை. அதனால், மானியச் செலவைக் குறைத்து, சொத்துக்களை உருவாக்குவதில் கவனம் செலுத்த வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
தீர்வு: செயல்படாமல் உள்ள தேசிய முதலீட்டு நிதியத்திற்கு (என்.ஐ.எப்.,) புத்துயிரூட்டி, புதிய அடிப்படை கட்டமைப்பு திட்டங்களுக்கு நிதியுதவி வழங்க வேண்டும். பொதுத் துறை நிறுவனங்களின் பங்கு விற்பனை, அலைவரிசை ஏலம் உள்ளிட்டவற்றின் மூலம் கிடைக்கும் தொகை முழுவதையும், கவர்ச்சியான திட்டங்களுக்கு செலவிடாமல், என்.ஐ.எப்.,–ல் முதலீடு செய்து, அதன் மூலம், சொத்துக்களை உருவாக்குவதில் அரசு தீவிர கவனம் செலுத்த வேண்டும்.சொத்து விற்பனை: பொருளாதார மந்தநிலையால், நடப்பாண்டும் வரி வருவாய் மிதமாகவே இருக்கும். அதனால், நிதிப் பற்றாக்குறையைக் குறைக்க, தனியார் துறையில் இருந்து, வரி சாரா வருவாயைத் திரட்டுவது அவசியம். அதே சமயம், நலிவுற்ற, திறம்பட செயல்பட முடியாத பொதுத் துறை நிறுவனங்களை விற்று, புதிய திட்டங்களுக்கான முதலீடுகளை திரட்டுவது குறித்து பரிசீலிக்கலாம்.தீர்வு: தனியார் மயமாக்கல் குறித்து, தனிப்பட்ட ஆணையம் அமைத்து, கொள்கைகளை உருவாக்க வேண்டும். பொதுத் துறை நிறுவனங்களின் விற்பனை, தனியார் நிறுவனங்களுக்கு சாதகமாக இல்லாமல், வெளிப்படையான, நியாயமான அணுகுமுறை தேவை.
வரி: அரசு, குறைந்த வரி வருவாயில், தரமான அடிப்படை கட்டமைப்புகளை உருவாக்குதல், குறைந்தபட்ச நலத்திட்டங்களை செயல்படுத்துவது போன்றவற்றை மேற்கொள்கிறது. ஆசிய அளவில், இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி அடிப்படையிலான வரி விகிதம், மிகக் குறைவாகவே உள்ளது. அதே சமயம், வரி விகிதங்களை உயர்த்துவதாலும் எதிர்பார்த்த பயனிருக்காது. இதற்கு, வரி விதிப்பு வரம்பிற்குள் அதிகமானோரை கொண்டு வருவதற்கு, எளிய, நிலையான வரி திட்டம் அவசியம்.தீர்வு: சரக்கு மற்றும் சேவைகள் வரி நீண்ட காலமாக விவாத அளவிலேயே இருந்து வருகிறது. இதை செயல்பாட்டிற்கு கொண்டு வந்தால், வரி வருவாய் அதிகரிக்கும்.
சேமிப்பு: நிதிச் சேவைகளின் பரவலாக்கம் காரணமாக, 2003ம் ஆண்டிற்கு பிறகு, மக்களின் சேமிப்பு அதிகரித்து வந்தது. ஆனால், 2008ம் ஆண்டு பிப்ரவரியில், அதாவது, சர்வதேச பொருளாதார நெருக்கடி நிலைக்கு ஆறு மாதங்களுக்கு முன், நாட்டின் வருவாய் பற்றாக்குறை அதிகரித்தது. இதன் விளைவாக, மக்களின் சேமிப்பு விகிதம் குறைந்து விட்டது. இதை சீர் செய்தால் மட்டுமே, உள்நாட்டு நிதியாதாரத்தை ஈர்க்க முடியும்.
தீர்வு: முன்னாள் பிரதமர் வாஜ்பாய் தலைமையிலான தே.ஜ., அரசு அறிமுகப்படுத்திய, சிறப்புமிக்க, நிதி பொறுப்பு மற்றும் பட்ஜெட் நிர்வாக சட்டத்தின் புதிய வடிவத்தை நடைமுறைக்கு கொண்டு வருவது, நல்ல பயனை கொடுக்கும்நிதி சந்தை: பணவீக்கம் உயர்வு மற்றும் டிபாசிட்டிற்கான வட்டி குறைவு போன்றவற்றால், மக்கள், தங்கம் போன்றவற்றில் முதலீடு செய்வது அதிகரித்துள்ளது. இந்திய பொருளாதாரம் மீண்டும் எழுச்சி பெற, நிதி சேமிப்பு மிகவும் அவசியமாகும்.தீர்வு: நிதிச் சேமிப்புகளுக்கான வரிச் சலுகைகளை அதிகரிக்க வேண்டும். அதே சமயம், அவை, பணவீக்கத்தை கட்டுப்படுத்த, ரிசர்வ் வங்கி எடுத்து வரும் நடவடிக்கைகளை பாதிக்காத வகையில் இருக்க வேண்டும்.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)