பதிவு செய்த நாள்
17 ஜூலை2014
17:34

மும்பை : இந்திய பங்குசந்தைகள் தொடர்ந்து மூன்றாவது நாளாக ஏற்றத்தில் முடிந்தன. இன்று(ஜூலை 17ம் தேதி) சிறு ஏற்றத்துடன் முடிந்தாலும் கடந்த ஒருவாரங்களில் இல்லாத அளவுக்கு ஏற்றதுடன் முடிந்தன. இன்றைய வர்த்தகநேர முடிவில் மும்பை பங்குசந்தையான சென்செக்ஸ் குறியீட்டு எண் 11.44 புள்ளிகள் உயர்ந்து 25,561.16-ஆகவும், தேசிய பங்குசந்தையான நிப்டி 16.05 புள்ளிகள் உயர்ந்து 7,640.45-ஆகவும் முடிந்தன.
சென்செக்ஸை அளவிட உதவும் 30 நிறுவன பங்குகளில் 17 நிறுவன பங்குகள் ஏற்றத்துடனும், 13 நிறுவன பங்குகள் சரிந்தும் முடிந்தன. குறிப்பாக ஹிண்டால்கோ, டாடா பவர், டாடா ஸ்டீல் மற்றும் கோல் இந்திய பங்குகள் நல்ல லாபம் அடைந்தன. அதேசமயம் பஜாஜ் ஆட்டோ, மஹிந்திரா அண்ட் மஹிந்திரா, கெயில் உள்ளிட்ட பங்குகள் சரிவை சந்தித்தன.
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|