பதிவு செய்த நாள்
24 ஜூலை2014
17:03

மும்பை : இந்திய பங்குசந்தைகள் தொடர்ந்து எட்டாவது நாளாக உயர்வுடன் காணப்படுகின்றன. இன்றைய வர்த்தகத்தில் சென்செக்ஸ் மற்றும் நிப்டி புதிய உச்சத்தை தொட்டுள்ளன. கடந்த சில நாட்களாகவே அந்நிய முதலீடுகள் அதிகரித்து வருவதால் பங்குசந்தைகள் உயர்வுடன் இருந்த நிலையில் இன்றைய வர்த்தகம் சிறு சரிவுடன் துவங்கியது. ஆனபோதும் இன்சூரன்ஸ் துறையில் அந்நிய முதலீட்டை 49 சதவீதமாக அதிகரிக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்ததன் எதிரொலியாகவும், இன்போசிஸ், ஐடிசி., ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவன பங்குகள் விலை உயர்ந்ததாலும் இந்திய பங்குசந்தைகள் சரிவில் இருந்து மீண்டு இன்று மீண்டும் ஒரு புதிய உச்சத்தை தொட்டன.
வர்த்தகநேர முடிவில் மும்பை பங்குசந்தையான சென்செக்ஸ் குறியீட்டு எண் 124.52 புள்ளிகள் உயர்ந்து, புதிய உச்சமாக 26,271.85-ஆக முடிந்தது. இதேப்போல் தேசிய பங்குசந்தையான நிப்டி 34.85 புள்ளிகள் உயர்ந்து 7800 புள்ளிகளை தாண்டி புதிய உச்சமாக 7,830.60-ஆக முடிந்தது.
இன்றைய வர்த்தகத்தில் இன்சூரன்ஸ் நிறுவன பங்குகளான ரிலையன்ஸ் கேபிட்டல், மேக்ஸ் இந்தியா பஜாஜ் உள்ளிட்ட நிறுவன பங்குகள் அதிக ஏற்றம் பெற்றன. இவைகள் தவிர்த்து டாடா ஸ்டீல், ஹிண்டால்கோ, ஸ்டெர்லைட், ஐடிசி, இன்போசிஸ் போன்ற நிறுவன பங்குகளும் உயர்வுடன் காணப்பட்டன.
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|