பதிவு செய்த நாள்
30 ஜூலை2014
03:49
புதுடில்லி: நடப்பாண்டின், முதல் ஆறு மாத காலத்தில் (ஜன., – ஜூன்), நாட்டின் உருக்கு உற்பத்தி, 1.4 சதவீதம் வளர்ச்சி கண்டு, 4.13 கோடி டன்னாக அதிகரித்துள்ளது.இது, கடந்த 2013ம் ஆண்டின் இதே காலத்தில், 4.07 கோடி டன்னாக இருந்தது என, உலக உருக்கு கூட்டமைப்பின் புள்ளிவிவரத்தில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.மதிப்பீட்டு காலத்தில், உலக உருக்கு உற்பத்தி, 2.5 சதவீதம் அதிகரித்து, 80.12 கோடி டன்னிலிருந்து, 82.13 கோடி டன்னாக வளர்ச்சி கண்டுள்ளது.இதில், சீனாவின் உருக்கு உற்பத்தி, 3 சதவீதம் அதிகரித்து, 41 கோடி டன்னாக உயர்ந்துள்ளது.
இதே போன்று தென்கொரியாவின் உருக்கு உற்பத்தியும், 9.1 சதவீதம் வளர்ச்சி கண்டுள்ளது. கணக்கீட்டு காலத்தில், ஜப்பான் (5.52 கோடி டன்), அமெரிக்கா (4.34 கோடி டன்), ரஷ்யா (3.48 கோடி டன்) ஆகிய நாடுகளின் உருக்கு உற்பத்தியும் குறிப்பிடத்தக்க அளவிற்கு உள்ளது.சர்வதேச உருக்கு உற்பத்தியில், சீனா, ஜப்பான் மற்றும் அமெரிக்காவிற்கு அடுத்தபடியாக, இந்தியா நான்காவது இடத்தில் உள்ளது. கடந்த 2013ம் ஆண்டில், இந்தியாவின் உருக்கு உற்பத்தி, 8.12 கோடி டன்னாக இருந்தது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|