பதிவு செய்த நாள்
30 ஜூலை2014
23:34
நாமக்கல்: ‘நாமக்கல் முட்டை மண்டலத்தில், முட்டை கொள்முதல் விலை, 260 காசுக்கு கீழ் இனி குறைக்கப்படமாட்டாது’ என, நாமக்கல் முட்டை மண்டல கமிட்டி தலைவர், செல்வராஜ் தெரிவித்தார்.இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது:
தேசிய அளவில், 24 முட்டை மண்டலங்கள், உள்ளன. இம்மண்டலங்கள், தினசரி முட்டை நுகர்வு, ஏற்றுமதி ஆகியவற்றை கணக்கில் கொண்டு, சம்பந்தப்பட்ட முட்டை மண்டல கமிட்டி மூலமாக, விலை நிர்ணயம் செய்கின்றன.
அதன்படி, நாமக்கல் முட்டை மண்டல கமிட்டி (‘நிக்’), தினசரி முட்டை தேவை மற்றும் தேசிய அளவிலான சந்தை நிலவரத்தை அறிந்து, விலை நிர்ணயம் செய்து வருகிறது.எனவே, பண்ணையாளர்கள் உண்மை நிலவரத்தை உணர்ந்து, ‘நிக்’ நிர்ணயிக்கும் விலையை காட்டிலும், குறைந்த விலைக்கு முட்டையை விற்க வேண்டாம். வியாபாரிகளும், பண்ணையாளருக்கு நெருக்கடி கொடுத்து, குறைந்த விலைக்கு முட்டையை பெற வேண்டாம்.
வரும், நாட்களில் நாமக்கல், ‘நிக்’ சார்பாக, முட்டை கொள்முதல் விலை, 260 காசுக்கும் கீழ் குறைத்து நிர்ணயம் செய்யப்படமாட்டாது.இவ்வாறு அவர் கூறினார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|