பதிவு செய்த நாள்
02 ஆக2014
14:11
சென்னையில், வர்த்தக பயன்பாட்டு 'காஸ்' சிலிண்டர் விலை, ஒரு ரூபாய் குறைக்கப்பட்டுள்ளது. பொதுத்துறையை சேர்ந்த இந்தியன் ஆயில், இந்துஸ்தான் பெட்ரோலியம், பாரத் பெட்ரோலியம் ஆகிய எண்ணெய் நிறுவனங்கள், வீட்டு உபயோகம் (14.20 கிலோ) மற்றும் வர்த்தக பயன்பாடு (19 கிலோ) என, இரண்டு வகையான, சமையல் 'காஸ்' சிலிண்டர்களை வினியோகம் செய்கின்றன.
இந்நிறுவனங்கள், சர்வதேச கச்சா எண்ணெய் விலையில் ஏற்படும், மாறுதலுக்கு ஏற்ப, மாதம்தோறும், வர்த்தக சிலிண்டர் மற்றும் மானியம் அல்லாத வீட்டு உபயோக சிலிண்டர் விலையில், மாற்றம் செய்கின்றன. அதன்படி, தற்போது, சென்னையில், வர்த்தக சிலிண்டர் விலை, ஒரு ரூபாய் குறைக்கப்பட்டு, 1,757.50 ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இது, கடந்த மாதம், 1,758.50 ரூபாயாக இருந்தது.
இதன் விலை, டில்லி, 1,535.50 ரூபாய்; மும்பை, 1,632 ரூபாய்; கோல்கட்டா, 1,619.50 ரூபாய் என்றளவில் உள்ளது. சென்னையில், மானியம் அல்லாத, வீட்டு உபயோக சிலிண்டர் விலை, 922 ரூபாய்; மானிய சிலிண்டர் விலை, 401 ரூபாய் என்ற அளவில் உள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|