பதிவு செய்த நாள்
10 ஆக2014
06:07
சென்னை:கடந்த வாரத்தில், ஆபரண தங்கம் விலை சவரனுக்கு, 280 ரூபாய் அதிகரித்திருந்தது.சென்னையில், நேற்று முன்தினம், 22 காரட் ஆபரண தங்கம், ஒரு கிராம், 2,727 ரூபாய்க்கும், ஒரு சவரன், 21,816 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டது. 24 காரட், 10 கிராம் சுத்த தங்கம், 29,170 ரூபாய்க்கு விற்பனையானது.
இந்நிலையில், நேற்று, தங்கம் விலை கிராமுக்கு, 23 ரூபாய் குறைந்து, 2,704 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. சவரனுக்கு, 184 ரூபாய் ரூபாய் சரிவடைந்து, 21,632 ரூபாய்க்கு விற்பனையானது. 10 கிராம் சுத்த தங்கம், 250 ரூபாய் குறைந்து, 28,920 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது.ஒரு கிராம் வெள்ளி, 47.20 ரூபாய்க்கும், ஒரு கிலோ பார் வெள்ளி, 44,120 ரூபாய்க்கும் விற்பனையானது. கடந்த திங்களன்று (4ம் தேதி), ஒரு கிராம் தங்கம், 2,669 ரூபாய்க்கும், ஒரு சவரன், 21,352 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டது.இதையடுத்து, கடந்த வாரத்தில் மட்டும், தங்கம் விலை கிராமுக்கு, 35 ரூபாயும், சவரனுக்கு, 280 ரூபாயும் அதிகரித்து காணப்பட்டது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|