பதிவு செய்த நாள்
18 செப்2014
11:21

இந்தியாவில், கார் விற்பனையில் முன்னணியில் உள்ள டாடா மோட்டார்ஸ் நிறுவனம், ‘செஸ்ட்’ என்ற புதிய காரை அறிமுகப்படுத்தி உள்ளது. இந்த கார், பெட்ரோல் மற்றும் டீசல் என, இரண்டு வகைகளிலும் கிடைக்கும். மகாராஷ்டிரா மாநிலம், புனேயில் உள்ள தொழிற்சாலையில், இந்த கார் உற்பத்தி செய்யப்படுகிறது.
காரின் சிறப்பு அம்சங்கள் :
* 15 அங்குல அலாய் வீல்கள்
* பெட்ரோல் காரில், 1.2 லிட்டர் இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இதன் சக்தி, 90 பி.எஸ்., – 5,000 ஆர்.பி.எம்., ஆகும். இழு சக்தி, 140 என்.எம்., – 1750 – 3,500 ஆர்.பி.எம்., ஆகும். இதன் அதிகபட்ச வேகம், மணிக்கு, 154 கி.மீட்டர். நான்கு ரகங்களில், இந்த கார் கிடைக்கும்.
* டீசல் காரில், 1.3 லிட்டர் குவாட்ராஜெட் இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இதன் சக்தி 90 பி.எஸ்., – 4,000 ஆர்.பி.எம்., ஆகும். இழு சக்தி, 200 என்.எம்., – 1,750 – 3,000 ஆர்.பி.எம்., ஆகும். இதன் அதிகபட்ச வேகம், மணிக்கு, 158 கி.மீட்டர். ஐந்து ரகங்களில், இந்த கார் கிடைக்கும்.
* செஸ்ட் காரில், 5 ஸ்பீடு மேனுவல் கியர் வசதி உள்ளது.
* இந்திய ஆட்டோமேடிவ் ரிசர்வ் அசோசியேஷன் (ஏ.ஆர்.ஏ.ஐ.,) சான்றின்படி, பெட் ரோல் கார், லிட்டருக்கு, 17.6 கி.மீட்டர், டீசல் கார், லிட்டருக்கு, 23 கி.மீட்டர் மைலேஜ் தரும்.
* டச் ஸ்கிரீன் வசதியில், வாய்ஸ் கமாண்ட் ரெக்னிஷன், எஸ்.எம்.எஸ்., அறிவிப்பு, தானியங்கி வெப்பநிலை மாற்றங்கள் ஆகியவை இடம் பெற்றுள்ளன.
மேலும் ஆட்டோமொபைல் செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|