தங்கம் விலை சவரனுக்கு ரூ.16 குறைவுதங்கம் விலை சவரனுக்கு ரூ.16 குறைவு ... ஆப­ரண தங்கம் விலைசவ­ர­னுக்கு ரூ.32 உயர்வு ஆப­ரண தங்கம் விலைசவ­ர­னுக்கு ரூ.32 உயர்வு ...
இட­துசாரி­க்கு மாற்று சிந்­தனை மேக் இன் இந்­தியா
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

07 அக்
2014
05:04

இந்­தி­யா­விற்கு சுதந்­திரம் கிடைத்த பின், பல துறை­களில், இட­து­சாரி சிந்­த­னை­யா­ளர்­களின் தாக்கம், பெரு­ம­ளவில் இருந்­தது. இது பொது­வாக, கல்வி மற்றும் பொரு­ளா­தார கொள்­கை­களில், பெரு­ம­ளவு இருந்து வந்­தது.இந்த பொரு­ளா­தார சிந்­த­னைகள் தான், இந்­தி­யாவை, 40 ஆண்­டு­க­ளாக, ஒரு ஏழை நாடாக வைத்து கொள்ள உத­வி­யது. இதன் கார­ண­மாக, 1991ல், நம் தேசம் திவா­லாகும் நிலை­மையை எட்­டி­யது.சோவியத் யூனியன்:அதே தரு­ணத்தில், இந்­தியா மட்­டு­மல்ல, எந்த நாடு­களில் எல்லாம் இட­து­சாரி சிந்­தனை தோன்­றி­யதோ, அந்­நா­டு­களும் அதே நிலையை தான் சந்­தித்­தன. இன்னும் சொல்லப் போனால், இட­து­சாரி சிந்­த­னையின் முக்­கிய கேந்­தி­ர­மாக விளங்­கிய, சோவியத் யூனியன் சிதறி, சுக்­கு­நுா­றாக உடைந்­தது.அதற்கு பின், 20 ஆண்­டு­க­ளாக, நேர்­ம­றை­யான சிந்­தனை உள்­ள­வர்கள், உல­கத்தின் எந்த மூலையில் இருந்­தாலும், இட­து­சாரி சிந்­த­னை­யா­ளர்­க­ளுக்கு, முக்­கி­யத்­துவம் அளிப்­ப­தில்லை. ஆனால், அவர்கள், இந்த யதார்த்­தத்தை புரிந்து கொள்­ளாமல், அவ்­வப்­போது தனது பிதற்­றல்கள் மூலம் முக்­கி­யத்­து­வத்தை வெளிப்­ப­டுத்தி வரு­கின்­றனர்.உதா­ர­ண­மாக, அண்­மையில், பிர­தமர் மோடி, தன் அரசின் மைய பொரு­ளா­தார கொள்கை, ‘மேக் இன் இந்­தியா’ என, அறி­வித்தார்.அதா­வது, உல­கத்தின் தொழில்­நுட்பம், முத­லீடு, மூலப்­பொ­ருட்கள் எங்­கி­ருந்து வந்­தாலும், முழு­மை­யான உற்­பத்தி பொருள், இந்­தி­யாவில் தான் உற்­பத்­தி­யாக வேண்டும் என்­பது தான் இதன் பொருள்.
இதில், யார் லாபம் அடைவர்?இதற்கு பதில் அளிக்க நீங்கள், ஒரு பொரு­ளா­தார நிபு­ண­ராக இருக்க வேண்­டிய அவ­சியம் இல்லை. இந்த கொள்கை மூலம் நேர்­மை­யான லாபம் அடை­ப­வர்கள், நம் நாட்டின் தொழி­லா­ளிகள். இதை கூட புரிந்து கொள்­ளாமல், இட­து­சா­ரி­யினர், ‘மேக் இன் இந்­தியா’, கொள்­கை­களை, விமர்­சனம் செய்­கின்­றனர்.இதில், விஷ­மத்­த­ன­மாக கருத காரணம் உண்டு. கடந்த ஐந்து ஆண்­டு­களில், சீனாவில் இருந்து – எங்கே, நம் நாட்டு இட­து­சா­ரி­களின் ஆன்மா இருக்­கி­றதோ – அங்­கி­ருந்து, ஒன்­பது லட்சம் கோடி ரூபாய்க்கு, பொருட்கள் இறக்­கு­மதி செய்து வந்­தி­ருக்­கிறோம்.இதன் கார­ண­மாக, சீனா வளர்ந்­தது. நமக்கு, தேக்கம் வந்­தது. இது தான் நம் நாட்டில், கடந்த ஐந்து ஆண்­டு­க­ளாக நிலவும் பொரு­ளா­தார நெருக்­க­டிக்கு காரணம்.வேலைவாய்ப்பு:சீனாவில் இருந்து வரும் இறக்­கு­ம­தியில், பெரும் ராணுவ தள­வா­டங்­களோ, தொழில்­நுட்ப பொருட்­களோ அல்ல. அங்­கி­ருந்து, விநா­யகர் சதுர்த்­திக்கு, விநா­யகர் சிலை­க­ளையும்; ஹோலிக்கு, வண்ண பவு­ட­ரையும் தான் இறக்­கு­மதி செய்­துள்ளோம்.இது தான், மோடி, மறை­மு­க­மாக சுட்­டிக்­காட்டும், ‘மேக் இன் இந்­தி­யா’வின் கொள்கை. ஒரு வேளை, இவற்றை, இந்­தி­யாவில் தயா­ரிக்க ஆரம்­பித்தால், இந்­திய பொரு­ளா­தாரம் வளரும்; வேலை­வாய்ப்பு அதி­க­ரிக்கும்.
அதே­ச­மயம், சீனா­வுக்கு நஷ்டம்.இதனால், அர­சியல் ரீதி­யாக, இட­து­சா­ரிகள், ‘மேக் இன் இந்­தியா’ கொள்­கையை எதிர்க்­கின்­றனர்.அடுத்­த­ப­டி­யாக, இந்­தி­யாவின் மொத்தம் வரு­மா­னத்தை ஒப்­பிட்டு பார்த்தால், பெரிய நிறு­வ­னங்­களின் பங்கு, 10 – 12 சத­வீதம். அதுவும், பங்குச் சந்­தையை சார்ந்த பெரிய நிறு­வ­னங்­களின் பங்கு, 3 – 5 சத­வீதம்.இவர்கள், இந்­திய பொரு­ளா­தா­ரத்தின் விளிம்பில் தான் உள்­ளனர்.
அவர்­களை மைய­மாக கொண்டு, இந்­திய பொரு­ளா­தா­ரத்தை விமர்­சனம் செய்­த­வர்கள், இட­து­சா­ரி­யினர். இதனால் தான், அவர்கள், இந்­திய அர­சி­யலில், விளிம்பு நிலையில் உள்­ளனர்.இந்த பெரிய நிறு­வ­னங்கள், ஊட­கங்­களில், முக்­கி­யத்­துவம் பெற்­றாலும், அவர்கள், இந்­திய பொரு­ளா­தா­ரத்தை பிர­தி­ப­லிப்­பது அல்ல.
பொருளாதார சூழல்:அடுத்­த­ப­டி­யாக, நம் நாட்டின் முத­லீட்டு தேவையில், வெளி­நாட்டு முத­லீட்டின் பங்கு, 2 சத­வீதம் தான். எஞ்­சி­யி­ருக்கும் முத­லீடு, உள்­நாட்டு சேமிப்பு மூலம் பூர்த்­தி­யா­கி­றது.அதனால், வெளி­நாட்டு முத­லீடு பற்றி விமர்­சனம் செய்­வதோ, அதை கண்டு அச்சம் கொள்­வதோ, நம் நாட்டு பொரு­ளா­தார சூழ்­நிலை ஒப்­பிட்டு பார்ப்­பதோ தேவை­யற்­றது.இந்­தியா போன்ற ஒரு பெரிய நாடு, வெளி­நாட்டில் இருந்து வரும், 2 சத­வீத முத­லீட்டை, தாரா­ள­மாக ஏற்று கொள்ளும். இதற்கு முக்­கி­யத்­துவம் கொடுத்து, இதனால், நம் நாட்டின் பொரு­ளா­தாரம் சிதைந்து போகும் என, கூறு­ப­வர்­களை பார்த்து, நாம் என்­ன­வென்று ஆறுதல் கூறு­வது.அப்­ப­டி­யானால்,= இந்­திய பொரு­ளா­தாரம் என்ன?= ‘மேக் இன் இந்­தியா’ எதை குறிக்கும்?கடந்த 2010 – 11ல், தேசிய மாதிரி ஆய்வு குழு­மத்தின் (என்.எஸ்.எஸ்.ஓ.,), 67வது சுற்றின், ஆய்­வ­றிக்கை வெளி­வந்­தது.அதில், முக்­கி­ய­மாக சில விஷ­யங்கள் வெளி­வந்­தன.அதா­வது, 5.76 கோடி குறு, சிறு தொழில்கள், 10 கோடி மக்­க­ளுக்கு, வேலை­வாய்ப்பு அளித்து வரு­கின்­றன. இதில், உற்­பத்தி, சேவை மற்றும் வர்த்­தகம் ஆகிய துறைகள் தான் அடங்கும்.குறு, சிறு நிறு­வ­னங்­க­ளுக்கு, வங்­கிகள், பெரிய அள­விற்கு உத­வு­வ­தாக தெரி­ய­வில்லை. அதேபோல், அந்த நிறு­வ­னங்கள், அரசின் சலு­கை­களை நம்பி இருப்­ப­தில்லை.குறு சிறு நிறுவனங்கள்இந்­தி­யாவின் மொத்த வரு­மா­னத்தில், 45 சத­வீதம் குறு, சிறு தொழில்­களின் பங்கு. அவர்­களை நோக்கி தான், மோடியின், ‘மேக் இன் இந்­தியா’ கொள்கை வகுக்­கப்­பட்­டுள்­ளது. குறு, சிறு நிறு­வ­னங்கள் உற்­பத்தி செய்­கின்­றன. அவர்­களின் உற்­பத்தி தான், அதை சார்ந்த மற்ற குறு, சிறு நிறு­வ­னங்­க­ளுக்கு போய் சேரு­கி­றது.
அவர்கள் தான், இந்­தி­யாவின் சேமிப்­புக்கு முக்­கிய பங்கு வகிக்­கின்­றனர். அவர்­க­ளது சேமிப்பு தான், இந்­தி­யாவின், 98 சத­வீத முத­லீட்­டிற்கு பணம் வரு­கி­றது. எஞ்­சிய, 2 சத­வீதம் வெளி­நாட்டு முத­லீடு. இதுதான், இந்­தியா பொரு­ளா­தா­ரத்தின் இதயம்.இதை தான், மோடி, ‘மேக் இன் இந்­தியா’ என்று, கூறு­கிறார். உள்­நாட்டு முத­லீட்­டா­ளர்கள், உற்­பத்­தி­யா­ளர்கள், நுகர்வோர், சேமிப்­பா­ளர்கள் ஆகி­யோ­ருக்கு, முக்­கி­யத்­துவம் அளிக்­கப்­ப­டு­கி­றது.இந்­தி­யாவில், சீனா, அமெ­ரிக்கா உள்­ளிட்ட நாடு­களில் இருக்கும் பன்­னாட்டு நிறு­வ­னங்­க­ளுக்கு, 2 சத­வீதம் தான் இடம் இருக்கும். ஆனால், 98 சத­வீதம், நம் நாட்­டி­ன­ருக்கு தான் இருக்கும்.மோடியின், ‘மேக் இன் இந்­தியா’ கொள்கை, ஒரு வேளை, 1960ல் கடை­பி­டிக்­கப்­பட்டு இருந்தால், இந்­திய பொரு­ளா­தார வல்­ல­ர­சா­கி­யி­ருக்கும்.இதை கெடுத்­தது, இட­து­சா­ரிகள் மற்றும் அவர்­களின் சிந்­த­னையும் தான்.– எம்.ஆர்.வெங்­கடேஷ் –பட்­டய கணக்­காளர் மற்றும் பொரு­ளா­தார நிபுணர்

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)