ஆபரண தங்கம் விலைசவரனுக்கு ரூ.16 அதிகரிப்புஆபரண தங்கம் விலைசவரனுக்கு ரூ.16 அதிகரிப்பு ... தங்கம் விலை ரூ.24 உயர்வு தங்கம் விலை ரூ.24 உயர்வு ...
தொழில் துறை உற்பத்தி 5 மாதங்களில் இல்லாத அளவில் குறைவு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

11 அக்
2014
01:28

புதுடில்லி: நாட்டின் தொழில் துறை உற்பத்தி வளர்ச்சி, சென்ற ஆகஸ்டில், ஐந்து மாதங்களில் இல்லாத வகையில் குறைந்துள்ளது.
குறிப்பாக, நுகர் பொருட்கள் மற்றும் தயாரிப்பு துறை உற்பத்தி பின்னடைவை கண்டதையடுத்து, ஒட்டுமொத்த தொழில் துறை உற்பத்தி வளர்ச்சி, சென்ற ஆகஸ்டில், 0.4 சதவீதம் என்ற அளவில் உள்ளது.
மறுமதிப்பீடுமத்திய புள்ளியியல் அலுவலகம், கடந்த ஜூலை மாதத்திற்கான, தொழில் துறை உற்பத்தி வளர்ச்சியை, மறுமதிப்பீட்டில், 0.41 சதவீதம் என்ற அளவில் குறைத்துள்ளது. இது, முதல் மதிப்பீட்டில், 0.5 சதவீதம் என, தெரிவிக்கப்பட்டிருந்தது. தொழில் துறை உற்பத்தி குறியீட்டு எண் கணக்கிடுவதில், தயாரிப்பு துறையின் பங்களிப்பு, 75 சதவீதமாக உள்ளது. இத்துறையின் உற்பத்தி, சென்ற ஆகஸ்ட்டில், 1.4 சதவீதம் பின்னடைவை கண்டுள்ளது. இது, கடந்தாண்டு இதே மாதத்திலும், 0.2 சதவீதம் சரிவடைந்திருந்தது.
ஆனால், நடப்பு நிதியாண்டின், முதல் ஐந்து மாத காலத்தில், தயாரிப்பு துறை, 1.8 சதவீதம் என்ற அளவில் வளர்ச்சி கண்டுள்ளது. இது, கடந்த நிதியாண்டின் இதே காலத்தில், 0.1 சதவீதம் பின்னடைவை கண்டிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
நுகர் பொருட்கள்நுகர் பொருட்கள் துறை உற்பத்தியும், சென்ற ஆகஸ்டில், 6.9 சதவீதம் பின்னடைவை கண்டுள்ளது. ஏப்., – ஆக., காலத்திலும், இத்துறையின் உற்பத்தி, 4.9 சதவீதம் என்றளவில் பின்னடைந்து உள்ளது.
மேலும், நுகர்வோர் சாதனங்கள் துறை உற்பத்தியும், சென்ற ஆகஸ்டில், 15 சதவீதம் என்ற அளவிலும், ஏப்., – ஆக., காலத்தில், 12.9 என்ற அளவிலும் சரிவை கண்டுள்ளது. இதுதவிர, நுகர்வோர் சாராத சாதனங்கள் துறை உற்பத்தியும், சென்ற ஆகஸ்ட்டில், 0.9 சதவீதம் சரிவடைந்து உள்ளது. இது, கடந்தாண்டின் இதே மாதத்தில், 5.4 சதவீதம் என்ற அளவில் வளர்ச்சி கண்டிருந்தது.
நடப்பு நிதியாண்டின், முதல் ஐந்து மாத காலத்தில், இத்துறையின் உற்பத்தி, 0.9 சதவீதம் வளர்ச்சி கண்டுள்ளது. கடந்த நிதியாண்டின் இதே காலத்தில், இத்துறையின் வளர்ச்சி, 6.8 சதவீதம் என்ற அளவில் மிகவும் அதிகரித்து காணப்பட்டது.நடப்பு 2014 – 15ம் நிதியாண்டின், ஏப்., முதல் ஆக., வரையிலான காலத்தில், நாட்டின் தொழில் துறை உற்பத்தி, 2.8 சதவீதம் என்ற அளவில் வளர்ச்சி கண்டுள்ளது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)