ரூபாயின் மதிப்பு சரிவு - மீண்டும் ரூ.62-ஐ தொட்டதுரூபாயின் மதிப்பு சரிவு - மீண்டும் ரூ.62-ஐ தொட்டது ... தங்கம் விலை ரூ.168 குறைவு தங்கம் விலை ரூ.168 குறைவு ...
வர்த்தகம் » ஆட்டோமொபைல்
ஹோண்டா அமேஸ் கார் கின்னஸ் சாதனை
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

20 நவ
2014
10:18

ஜப்பானைச் சேர்ந்த ஹோண்டா கார் நிறுவனம், இந்தியாவில், கடந்த ஆண்டு ஏப்ரலில், ‘அமேஸ்’ காரை அறிமுகம் செய்தது. இது, பெட்ரோல் மற்றும் டீசல் என இரண்டு வகைகளிலும் கிடைக்கும். 5 ஸ்பீடு மேனுவல் கியர் வசதி கொண்டது. உ.பி., மாநிலம், நொய்டாவில் உள்ள ஹோண்டா தொழிற்சாலையில், ‘அமேஸ்’ கார் உற்பத்தி செய்யப்படுகிறது. ஒரு லட்சம், ‘அமேஸ்’ கார்கள் விற்பனை என்ற சாதனை சமீபத்தில் நிகழ்த்தப்பட்டது.இதை கொண்டாடும் விதமாக, 23,800 கி.மீ., தூரத்திற்கு, ‘அமேஸ்’ காரை இயக்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டது.
இந்தியாவில் உள்ள நெடுஞ்சாலைகள், கரடு முரடான சாலைகள், மலைப்பாதைகள், போக்குவரத்து நெரிசல் மிகுந்த சாலைகள் என பல வகையான சாலைகளில், இந்த கார் இயக்கப்பட்டது. இந்த முயற்சி, செப்., 12ம் தேதி, ராஜஸ்தான் மாநிலம், ஜோத்பூரில் துவங்கியது. 55 நாட்களுக்கு தொடர்ச்சியாக, இந்த கார் இயக்கப்பட்டது. அந்த வகையில், ஒரே நாட்டில், மிக நீண்ட தூரத்திற்கு இயக்கப்பட்ட கார் என்ற பிரிவில், ஹோண்டா, ‘அமேஸ்’ கார் தேர்வு செய்யப்பட்டது என நிறுவனம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

Advertisement

மேலும் ஆட்டோமொபைல் செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)