வர்த்தகம் » பொது
தங்கம் விலை அதிரடியாக சரிவு:சவரனுக்கு ரூ.736 குறைவு
கருத்தைப் பதிவு செய்ய
பதிவு செய்த நாள்
29 நவ2014
11:31

சென்னை:கடந்த வாரத்தில், ஆபரண தங்கம் விலை சவரனுக்கு, 736 ரூபாய் சரிவடைந்தது.
சென்னையில், நேற்று முன்தினம், 22 காரட் ஆபரண தங்கம், ஒரு கிராம், 2,457 ரூபாய்க்கும், ஒரு சவரன், 19,656 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டது. 24 காரட், 10 கிராம் சுத்த தங்கம், 26,520 ரூபாய்க்கு விற்பனையானது.
இந்நிலையில், நேற்று, தங்கம் விலை கிராமுக்கு, 38 ரூபாய் குறைந்து, 2,419 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. சவரனுக்கு, 304 ரூபாய் சரிவடைந்து, 19,352 ரூபாய்க்கு விற்பனையானது. 10 கிராம் சுத்த தங்கம், 170 ரூபாய் குறைந்து, 26,350 ரூபாய்க்கு
விற்பனை செய்யப்பட்டது.ஒரு கிராம் வெள்ளி, 37.60 ரூபாய்க்கும், ஒரு கிலோ பார் வெள்ளி, 35,095 ரூபாய்க்கும் விற்பனையானது.
கடந்த திங்கள் கிழமை (24ம் தேதி), ஒரு கிராம் தங்கம், 2,511 ரூபாய்க்கும், ஒரு சவரன், 20,088 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டது.
இதையடுத்து, கடந்த வாரத்தில் மட்டும், தங்கம் விலை கிராமுக்கு, 92 ரூபாயும், சவரனுக்கு, 736 ரூபாயும் குறைந்தது.
இதுகுறித்து, இந்திய நவரத்தினங்கள் மற்றும் தங்க ஆபரண வர்த்தக கூட்டமைப்பின் மண்டல தலைவர் அனந்தபத்மநாபன் கூறியதாவது:தங்கம் இறக்குமதியை கட்டுப்படுத்த, மொத்த தங்கம் இறக்குமதியில், 20 சதவீதம் ஆபரணங்களாக ஏற்றுமதி செய்ய வேண்டும் என்று, கடந்த ஆகஸ்ட் மாதம், ரிசர்வ் வங்கி, நிபந்தனை விதித்தது.இதனால், தங்கம் இறக்குமதி குறைந்து, உள்நாட்டில், தங்கத்திற்கு தட்டுப்பாடு ஏற்பட்டு, அதன் விலை உயர்ந்ததால், தங்கம் விற்பனை கடுமையாக பாதிக்கப்பட்டது.
எனவே, 'தங்கம் இறக்குமதிக்கு விதித்த நிபந்தனையை ரத்து செய்ய வேண்டும்' என, மத்திய நிதி, தொழில், வர்த்தக அமைச்சகங்களிடம், தொடர்ந்து கோரிக்கை விடுக்கப்பட்டது.தற்போது, ரிசர்வ் வங்கி, நிபந்தனையை ரத்து செய்ததால், தங்கம் விலை குறைந்து வருகிறது.இவ்வாறு, அவர் கூறினார்.
Advertisement
மேலும் பொது செய்திகள்

வர்த்தக துளிகள் நவம்பர் 29,2014
அதிகரிக்கும் போலியான மதிப்பீடுகள்மின்னணு வர்த்தக தளங்களில், பொருட்கள் குறித்த போலியான மதிப்பீடுகள், ... மேலும்

நாட்டின் பொருளாதார வளர்ச்சி‘மூடிஸ்’ நிறுவனத்தின் கணிப்பு நவம்பர் 29,2014
புதுடில்லி–நடப்பு ஆண்டுக்கான இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 8.8 சதவீதமாக இருக்கும் என, ‘மூடிஸ் இன்வெஸ்டார்ஸ் ... மேலும்

பணவீக்க அதிகரிப்பின் காரணமாகதாமதமாகும் ஜி.எஸ்.டி., மாற்றங்கள் நவம்பர் 29,2014
புதுடில்லி–நாட்டில் பணவீக்கம் தொடர்ந்து அதிகரித்து வருவதை அடுத்து, ஜி.எஸ்.டி., விகித அடுக்குகளை மாற்றி ... மேலும்

இந்திய அரசு வோடபோன் ஐடியா பங்குகளை வாங்க செபி அனுமதி நவம்பர் 29,2014
புதுடில்லி : இந்திய அரசு மும்பை பங்குச் சந்தையில் வோடபோன் ஐடியா லிமிடட்(விஐஎல்)-ன் அதிக பங்குகளை வாங்க ... மேலும்

கோல்கட்டா : இந்தியாவின் மிகப்பெரிய நிலக்கரி தயாரிப்பு பொதுத்துறை நிறுவனமான கோல் இந்தியா, இந்த ஆண்டின் கடைசி ... மேலும்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!