பதிவு செய்த நாள்
07 டிச2014
00:55
விருதுநகர்:விருதுநகர் மார்க்கெட்டில் பருப்பு மூடைக்கு 200 ரூபாய், கடலை எண்ணெய் டின்னுக்கு 50 ரூபாய் விலை குறைந்தது. ஆனால் சர்க்கரை விலையில் மாற்றமில்லை.
எண்ணெய் மார்க்கெட்டில் கடந்த வாரத்தைவிட 50 ரூபாய் குறைந்து கடலை எண்ணெய்(15 கிலோ டின்) 1,300 மற்றும் நல்லெண்ணெய் 3,200 , சன்பிளவர் எண்ணெய் 1,150 ரூபாய்க்கு விற்பனையானது. டின்னுக்கு 20 ரூபாய் குறைந்து பாமாயில் 830 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. 80 கிலோ நிலக்கடலை பருப்பு 4,100, 100 கிலோ கடலை புண்ணாக்கு 3,900 ரூபாய்க்கு விற்பனையானது.
சர்க்கரை விலையில் மாற்றமில்லை: கடந்தவாரத்தைப்போலவே 100 கிலோ சர்க்கரை 3,210, 90 கிலோ மைதா, 90 கிலோ ரவை தலா 3,045 ரூபாய்க்கு விற்பனையானது. 55 கிலோ பொரிகடலை 2,410 ரூபாயாக உள்ளது.
பருப்பு விலை குறைந்தது: 100 கிலோ பர்மா உளுந்தில் பொடிவகை 5,400, பருவட்டு 6,400 , நாட்டு உளுந்து 6,200 ரூபாய்க்கு விற்பனையானது. 100 கிலோ உளுத்தம் பருப்பில் பர்மா பொடிவகை 7,000, பருவட்டு 7,800, நாடு 8,400 ரூபாய்க்கு விற்பனையானது. 100 கிலோ துவரம் பருப்பில் நாடுவகை 7,600, இரண்டாம் வகை 6,800, பொடி வகை 6,400 ரூபாய்க்கு விற்பனையானது. அமெரிக்கா, கனடா உள்ளிட்ட நாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட இப்பருப்புகள் மார்க்கெட்டிற்கு வந்துள்ளதால் இவற்றின் விலை மூடைக்கு சராசரியாக 200 ரூபாய் வரை குறைந்துள்ளது.
100 கிலோ முதல் ரக பாசிப்பருப்பு 10,600, இரண்டாம் ரகம் 10,300 ரூபாய்க்கு விற்பனையானது. ஒருகுவிண்டால் ஆந்திரா குண்டூர்வத்தல் 9,100 ரூபாய் முதல் 9,400 ரூபாய் வரை விற்பனையானது. நாட்டுவத்தல் வரத்து இல்லை.
மேலும் கம்மாடிட்டி செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|