பதிவு செய்த நாள்
07 டிச2014
00:56
சென்னை:நேற்று, ஆபரண தங்கம் விலை சவரனுக்கு, 104 ரூபாய் குறைந்தது.சென்னையில், நேற்று முன்தினம், 22 காரட் ஆபரண தங்கம், ஒரு கிராம், 2,456 ரூபாய்க்கும், ஒரு சவரன், 19,648 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டது. 24 காரட் 10 கிராம் சுத்த தங்கம், 26,780 ரூபாய்க்கு விற்பனையானது.
இந்நிலையில், நேற்று, தங்கம் விலை கிராமுக்கு, 13 ரூபாய் குறைந்து, 2,443 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. சவரனுக்கு, 104 ரூபாய் சரிவடைந்து, 19,544 ரூபாய்க்கு விற்பனையானது. 10 கிராம் சுத்த தங்கம், 140 ரூபாய் குறைந்து, 26,640 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது.ஒரு கிராம் வெள்ளி, 38.90 ரூபாய்க்கும், ஒரு கிலோ பார் வெள்ளி, 36,135 ரூபாய்க்கும் விற்பனையானது.
கடந்த திங்களன்று (1ம் தேதி), ஒரு கிராம் தங்கம், 2,436 ரூபாய்க்கும், ஒரு சவரன், 19,488 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டது. இதையடுத்து, கடந்த வாரத்தில் மட்டும், தங்கம் விலை கிராமுக்கு, ஏழு ரூபாயும், சவரனுக்கு, 56 ரூபாயும் அதிகரித்துள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|