பதிவு செய்த நாள்
28 டிச2014
01:10

மும்பை:நடப்பு டிச., 1ம் தேதி முதல், 15ம் தேதி வரையில், நாட்டின் தங்கம் இறக்குமதி, 22 டன்னாக குறைந்துள்ளது. இது, முந்தைய மாதம், 151 டன்னாக இருந்தது என, இந்திய நவரத்தினங்கள் மற்றும் ஆபரணங்கள் கூட்டமைப்பு தலைவர் ஹரேஷ் சமன்பாய் தெரிவித்துள்ளார்.அவர் மேலும் கூறியதாவது:‘தங்கம் மீது மேலும் அதிக கட்டுப்பாடுகள் விதிக்கப்படும்’ என, வியாபாரிகள் அஞ்சியதால், கடந்த நவம்பரில், அதன் இறக்குமதி அதிகரித்தது. இந்நிலையில், தங்கம் இறக்குமதியில் 20 சதவீதத்தை மதிப்பு கூட்டப்பட்ட ஆபரணமாக ஏற்றுமதி செய்ய வேண்டும் என்ற கட்டுப்பாடு, நவ., 28ம் தேதி நீக்கப்பட்டது.இதை தொடர்ந்து, மேலும் பல கட்டுப்பாடுகளை மத்திய அரசு தளர்த்தும் என, எதிர்பார்க்கப்படுகிறது. அதனால், தங்கம் இறக்குமதியை வியாபாரிகள் குறைத்துள்ளனர். தற்போது, வியாபாரிகளிடம் அதிக அளவில் தங்கம் உள்ளது; ஆனால், அதற்கேற்ப தங்கத்தின் தேவை இல்லை. வரும் ஜனவரியில், தங்கத்திற்கான தேவை அதிகரிக்கும் என, தெரிகிறது.இவ்வாறு, அவர் கூறினார்.
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|