இந்திய ரூபாயின் மதிப்பு உயர்வுஇந்திய ரூபாயின் மதிப்பு உயர்வு ... தங்கம், வெள்ளி விலையில் மாற்றமில்லை தங்கம், வெள்ளி விலையில் மாற்றமில்லை ...
இந்தியாவில் தங்கத்தின் தேவை:14 சதவீதம் குறைந்தது
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

13 பிப்
2015
15:23

மும்பை:இந்தியாவில் தங்கத்தின் தேவை, கடந்த 2014ம் ஆண்டில், 14 சதவீதம் குறைந்து, 843 டன்னாக சரிவடைந்து உள்ளது. இது, முந்தைய 2013ல், 975 டன்னாக அதிகரித்து காணப்பட்டது.கட்டுப்பாடு:மத்திய அரசு, தங்கம் இறக்குமதிக்கு விதித்த கட்டுப்பாடுகளே, தேவை குறைந்து போனதற்கு முக்கிய காரணம் என, உலக தங்க கவுன்சில் (டபிள்யூ.ஜி.சி.,) தெரிவித்துஉள்ளது.கடந்த 2014ல், நாட்டின் ஒட்டு மொத்த தங்கம் இறக்குமதி, 769 டன்னாக (கடத்தல் தங்கம் உட்பட) குறைந்துள்ளது.
இது 2013ல், 825 டன்னாக இருந்தது. தங்கம் இறக்குமதி மதிப்பின் அடிப்படையிலும், 19 சதவீதம் வீழ்ச்சி கண்டு, 2.57 லட்சம் கோடியிலிருந்து, 2.08 லட்சம் கோடி ரூபாயாக சரிவடைந்து உள்ளது.அதேசமயம், இந்தியாவில் ஆபரணங்களுக்கான தேவை, 8 சதவீதம் உயர்ந்து, 613 டன்னிலிருந்து, 662 டன்னாக வளர்ச்சி கண்டுள்ளது.கடந்தாண்டில் மட்டும், கடத்தல் மூலம் கொண்டு வரப்பட்ட தங்கம், 175 டன்னாக இருக்கும் என, மதிப்பிடப்பட்டு உள்ளது.
தங்க கடத்தல் :மத்திய அரசு, வரியை குறைத்து, இறக்குமதி கட்டுப்பாடுகளை நீக்குமானால், நடப்பாண்டில், தங்க கடத்தல் குறிப்பிடத்தக்க அளவிற்கு குறையும் என, டபிள்யூ.ஜி.சி.,யின் நிர்வாக இயக்குனர் (இந்தியா) சோமசுந்தரம் தெரிவித்தார்.முதலீடு:கடந்தாண்டில், தங்கக் கட்டி மற்றும் நாணய விற்பனைக்கு தடைவிதிக்கப்பட்டதை தொடர்ந்து, அதில் மேற்கொள்ளப்படும் முதலீடும், குறிப்பிடத்தக்க அளவிற்கு சரிவடைந்து உள்ளது.
இதன்படி, தங்கத்தில் மேற்கொள்ளப்பட்ட ஒட்டுமொத்த முதலீடு, 50 சதவீதம் வீழ்ச்சி கண்டு, 362 டன்னிலிருந்து (95,461 கோடி ரூபாய்), 181 டன்னாக (44,847 கோடி ரூபாய்) குறைந்துள்ளது. பொருளாதார சூழல் மேம்பட்டு வருவது மற்றும் உள்நாட்டு உற்பத்தி குறித்த சிறப்பான மதிப்பீடு போன்றவற்றால், நடப்பாண்டில் தங்கத்திற்கான தேவை, 900 - 1,000 டன் என்ற அளவில் சிறப்பாக இருக்கும் என, சோமசுந்தரம் தெரிவித்தார்.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)