ரயில்வே பட்ஜெட் தாக்கல் – ரயில் கட்டணம் உயர்வில்லை! அடுத்த 5 ஆண்டுகளில் ரூ.8.50 லட்சம் கோடி முதலீடு!!ரயில்வே பட்ஜெட் தாக்கல் – ரயில் கட்டணம் உயர்வில்லை! அடுத்த 5 ஆண்டுகளில் ... ... இந்திய ரூபாயின் மதிப்பு சரிவு இந்திய ரூபாயின் மதிப்பு சரிவு ...
வர்த்தகம் » பங்கு வர்த்தகம்
ரயில்வே பட்ஜெட் ஏமாற்றம் – சென்செக்ஸ் 261 வீழ்ச்சி!
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

26 பிப்
2015
17:27

மும்பை : மத்திய அரசு தாக்கல் செய்த ரயில்வே பட்ஜெட்டில் எதிர்பார்த்தளவுக்கு புதிய திட்டங்கள் இல்லாததால் பங்குசந்தைகள் சரிவை சந்தித்தன. மோடி அரசு பொறுப்பேற்ற பின்னர் தாக்கல் செய்யும் முதல் ரயில்வே பட்ஜெட் என்பதால், அதன் மீதான எதிர்பார்ப்பால் இன்றைய வர்த்தகம் துவங்கும் போது உயர்வுடன் துவங்கின. ஆனால் மத்திய அரசு தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட் ஏமாற்றத்தை தந்ததால் வர்த்தகம் சரிந்தன. கடந்த இரண்டு வாரங்களுக்கு பிறகு மோசமான சரிவை சந்தித்தது பங்குசந்தை. மேலும் சென்செக்ஸூம் 29,000 புள்ளிகளுக்கு கீழ் சென்றது.
வர்த்தக நேர முடிவில் மும்பை பங்குசந்தையின் குறியீட்டு எண் சென்செக்ஸ் 261.34 புள்ளிகள் சரிந்து 28,746.55–ஆகவும், தேசிய பங்குசந்தையின் நிப்டி 83.40 புள்ளிகள் சரிந்து 8,683.85–ஆகவும் முடிந்தது.
சென்செக்ஸை அளவிட உதவும் 30 நிறுவன பங்குகளில் 24 நிறுவன பங்குகள் சரிந்தும், 5 நிறுவன பங்குகள் உயர்ந்தும், ஹீரோ மோட்டோ கார்ப் நிறுவன பங்குகள் மாற்றமின்றியும் முடிந்தன.
ரயில்வே சரக்கு கட்டணம் 10 சதவீதம் உயர்த்தப்பட்டதால் சிமெண்ட், நிலக்கரி மற்றும் உலோகம் தொடர்பான பங்குகள் சரிவை சந்தித்தன. குறிப்பாக இன்றைய வர்த்தகத்தில் டெக்ஸ்மோ ரயில்(–2.51 சதவீதம்), ரயில் நிர்மான் (–4.05 சதவீதம்), ஸ்டோன் இந்தியா (–7.01 சதவீதம்) பிஇஎம்எல் (–1.65 சதவீதம்) சரிவை சந்தித்தன.

Advertisement

மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)