பதிவு செய்த நாள்
28 மே2015
12:52

டி.வி.எஸ்., மோட்டார் கம்பெனி, இந்தியாவில் மோட்டார் சைக்கிள், ஸ்கூட்டர், ஆட்டோ உள்ளிட்ட வாகனங்களை உற்பத்தி மற்றும் விற்பனை செய்து வருகிறது. ஸ்கூட்டர் பிரிவில், ‘ஜூபிடர், வீகோ, ஸ்கூட்டி செஸ்ட், ஸ்கூட்டி ஸ்ட்ரீக், ஸ்கூட்டி பெப் பிளஸ், டி.வி.எஸ்., எக்ஸ்எல் எச்டி’ ஆகிய மாடல்கள் உள்ளன.
இதில், ஜூபிடர் ஸ்கூட்டர், 2013 செப்டம்பரில், இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டது. இந்த ஸ்கூட்டரில், முழுவதும் அலுமினியத்தில் தயாரிக்கப்பட்ட, 110 சிசி திறன் கொண்ட இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இந்த ஸ்கூட்டர், பூஜ்ஜியத்தில் இருந்து, 60 கி.மீ., வேகத்தை, 11.2 வினாடிகளில் தொட்டு விடும் திறன் படைத்தது. ஒரு லிட்டர் பெட்ரோலுக்கு, 62 கி.மீ., மைலேஜ் தரும் என நிறுவனம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த ஆண்டு, ஜூபிடர் ஸ்கூட்டரின் ஸ்பெஷல் எடினும் விற்பனைக்கு வந்தது. அறிமுகம் செய்யப்பட்ட, 18 மாதங்களில், 5 லட்சம் ஸ்கூட்டர் விற்பனை என்ற சாதனையை, ஜூபிடர் ஸ்கூட்டர் நிகழ்த்தி உள்ளது.
மேலும் ஆட்டோமொபைல் செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|