பதிவு செய்த நாள்
04 ஜூன்2015
10:25
மும்பை : இந்திய பங்குசந்தைகள் போன்று இந்திய ரூபாயின் மதிப்பும் சரிவை சந்தித்து வருகிறது. இன்று காலையில் மீண்டும் ரூ.64-ஐ தாண்டியுள்ளது. இன்றைய வர்த்தகநேர துவக்கத்தில் (காலை 9.15மணி) அந்நிய செலாவணி சந்தையில், அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு 35 காசுகள் சரிந்து ரூ.64.25-ஆக இருந்தது. தொடர்ந்து சரிவில் இருந்த ரூபாயின் மதிப்பு இறுதியில் 10 காசுகள் சரிந்து ரூ.64.00ஆக முடிந்தது. இறக்குமதியாளர்கள் மற்றும் வங்கிகளுக்கு அமெரிக்க டாலரின் தேவை அதிகரித்து இருப்பதாலும், உலகளவில் டாலரின் மதிப்பு உயர்ந்து பிற நாட்டு கரன்சிகளின் மதிப்பு சரிந்ததாலும் ரூபாயின் மதிப்பு சரிவை சந்தித்துள்ளதாக சந்தை வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர். முன்னதாக நேற்று ரூபாயின் மதிப்பு 8 காசுகள் சரிந்து ரூ.63.90-ஆக முடிந்தது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|