பதிவு செய்த நாள்
08 ஜூன்2015
06:42

மத்திய பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட தங்க டெபாசிட் திட்டத்திற்கான வரைவு நெறி முறை களை வெளியிட்டு இது தொடர்பான கருத்துக்களை அரசு கோரியிருந்தது. பொதுமக்கள் மற்றும் அமைப்புகளிடம் இருந்து 500 க்கும் மேற்பட்ட ஆலோசனைகள் குவிந்துள்ளன. 6 சதவீத வட்டி தேவை என்பது உட்பட பல்வேறு யோசனைகள் குவிந்துள்ளன.
* பெரும்பாலான ஆலோசனைகள் வட்டி விகிதம் தொடர்பாக இருக்கிறது. ஒரு சதவீதம் எனும் குறைந்த வட்டியால் தான் முந்தைய தங்க டெபாசிட் திட்டம் தோல்வி அடைந்ததாக பலரும் கூறியுள்ளனர்.* டெபாசிட் செய்ய முன்வருபவர்களிடம் தகவல்கள் கேட்பதை மேலும் எளிமையாக்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.* ஒரு சிலர் டெபாசிட் செய்த காலத்தில் நகைகளை பயன்படுத்தும் தேவை ஏற்பட்டால் பயன்படுத்திக்கொள்ள தங்க நகை வாடகை திட்டம் தேவை என்றும் கூறியுள்ளனர். * பலர், தங்கம் உருக்கப்படுவது குறித்து தயக்கம் தெரிவித்துள்ளனர். இன்னும் சிலர் தங்கத்தை டெபாசிட் செய்வதற்கு பதில் வங்கிகளிலேயே விற்கும் வசதி தேவை என்றும் கூறியுள்ளன்ர்.* பொது மக்கள் தவிர இந்திய வங்கிகள் சங்கம் மற்றும் உலக தங்க கவுன்சில் போன்ற அமைப்புகள் சார்பிலும் ஆலோசனைகள் தெரிவிக்கப்பட்டு உள்ளன. டிபாசிட் செய்யப்படும் தங்கம், 500 கிராமுக்கு குறைவாக இருந்தால், பான் கார்டு எண் சமர்ப்பிக்க வேண்டும் என கோர வேண்டாம் என்றும், அடையாள அட்டை போன்றவற்றை காண்பித்தாலே போதுமானதாக இருக்க வேண்டும் என்றும் வங்கிகள் சங்கம் தெரிவித்துள்ளது.
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|