ரூபாயின் மதிப்பு சரிவு - ரூ.63.65ரூபாயின் மதிப்பு சரிவு - ரூ.63.65 ... தங்கம் விலை சவரனுக்கு ரூ.176 அதிகரிப்பு தங்கம் விலை சவரனுக்கு ரூ.176 அதிகரிப்பு ...
வர்த்தகம் » ஆட்டோமொபைல்
ஹுண்டாய் நிறுவனத்தின் ‘கிரெட்டா’ கார் – எஸ்.யு.வி., பிரிவில் அட்டகாச அறிமுகம்!
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

23 ஜூலை
2015
11:21

ஹுண்டாய் மோட்டார் இந்தியா நிறுவனம், இந்தியாவில், 1996 முதல் செயல்பட்டு வருகிறது. காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதூரில், இதன் தொழிற்சாலை உள்ளது. இந்த நிறுவனம் சார்பில் ‘இயான், சான்ட்ரோ ஜிங், ஐ10, ஐ20, எக்ஸ்சென்ட், எலன்ட்ரா’ உள்ளிட்ட கார்கள் உள்ளூரில் உற்பத்தியாகி விற்பனை செய்யப்படுகின்றன. ‘சொனட்டா, சான்டா பீ’ கார்கள், வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டு விற்பனை செய்யப்படுகின்றன.
ஹுண்டாய் நிறவனம், தற்போது, ஸ்போர்ட்ஸ் யுடிலிட்ட வைகிகள் – எஸ்.யு.வி., பிரிவில், ‘கிரெட்டா’ என்ற காரை அறிமுகம் செய்துள்ளது. இந்த கார், பெட்ரோல் மற்றும் டீசல் என இரண்டு வகைகளிலும் கிடைக்கும். பெட்ரோல் காரில், 1.6 லிட்டர் இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. டீசல் கார், 1.4 லிட்டர், 1.6 லிட்டர் என, இரண்டு வகை இன்ஜின் பிரிவுகளில் கிடைக்கிறது.
சிறப்பு அம்சங்கள்
* 1.6 லிட்டர் இன்ஜின் பொருத்தப்பட்ட காரில் மட்டும், 6 ஸ்பீடு ஆட்மோ மேடிக் கியர் பாக்ஸ் வசதி உள்ளது. மற்ற மாடல் கார்களில், மேனுவல் கியர் பாக்ஸ் வசதி உள்ளது.
* பெட்ரோல் கார், லிட்டருக்கு 15.29 கி.மீட்டர்; 1.4 லிட்டர் இன்ஜின் பொருத்தப்பட்ட டீசல் கார், 21.38 கி.மீட்டர்; 1.6 லிட்டர் இன்ஜின் டீசல் கார், 17.01 கி.மீ., மைலேஜ் தரும் என நிறுவனம் தரப்பில் தெரிவிக்கப் பட்டுள்ளது.
* இந்த காரின் விலை, 8.59 லட்சம் ரூபாய் (ஷோரூம், டில்லி) என, துவங்குகிறது. அதிகபட்சம் விலை கொண்ட காரில், 6 ஏர்பேக், கீலெஸ் என்ட்ரி, 7 அங்குல டச் ஸ்கிரீன் உள்ளிட்ட நவீன அம்சங்கள் இடம் பெற்றுள்ளன.
* துவக்க விலை காரில், பின் இருக்கையிலும் ஏ.சி., வசதி, ரிமோட் லாக்கிங், 4 ஸ்பீக்கர் ஆடியோ சிஸ்டம், ஆன்டி பிரேக்கிங் சிஸ்டம் – ஏ.பி.எஸ்., ஆகிய வசதிகள் உள்ளன.
* இந்த வாகனத்திற்கு, 15 ஆயிரம் பேர் முன் பதிவு செய்துள்ளது.
* மாதத்திற்கு, 5,500 கார்கள் உற்பத்தி செய்யப்படும்.
வாடிக்கையாளர் ஆர்வத்தை பொறுத்து, மாதத்திற்கு, 7,000 கார்கள் உற்பத்தி செய்யப்படும் என நிறுவனம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

மேலும் ஆட்டோமொபைல் செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)