பதிவு செய்த நாள்
01 செப்2015
11:02

மகிந்திரா நிறுவனம், ‘டி.யு.வி., 300’ என்ற பெயரில், நான்கு மீட்டருக்கு குறைவான நீளம் கொண்ட, எஸ்.யு.வி., கார், செப்., 10-ம் தேதி, அறிமுகம் செய்கிறது. சந்தையில், எதிர்பார்ப்பை அதிகரிக்கும் வகையில், அந்த வாகனத்தின், தோற்றத்தை முழுவதும் வெளியிடாமல் இருந்தது.இந்த மாத துவக்கத்தில், அந்தக் காரின் முன்புற, தோற்றத்தை மட்டும் வெளியிட்டது. முகப்பு விளக்கு, சக்கரம் போன்றவற்றை மட்டும் பார்க்க முடிந்தது. இப்போது, ‘ஸ்டீயரிங்’ மற்றும் பொருட்கள் வைக்கும், ‘கிளஸ்டர்’ ஆகியவற்றின் தோற்றத்தை வெளியிட்டுள்ளது. ‘ஸ்டீயரிங்’கின் இடதுபக்கம், ஆடியோ மற்றும் ‘புளுடூத்’ பொத்தான்கள் இருக்கின்றன. ‘ஸ்டீயரிங்’குக்கு கீழே, ‘ஸ்பீடா மீட்டர், டேக்கோ மீட்டர்’ அவற்றுக்கு இடையே, தகவல் தெரிவிக்கும் விளக்குகள் இருக்கின்றன. இந்தக் கார் விளம்பரத்துக்கு, அந்நிறுவனம் மேற்கொள்ளும் யுக்தி, எதிர்பார்ப்பை அதிகரித்து இருக்கிறது.
மேலும் ஆட்டோமொபைல் செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|