பதிவு செய்த நாள்
01 செப்2015
16:20

இரு சக்கர வாகன உற்பத்தியில் தாமதமாக நுழைந்த மகிந்திரா நிறுவனம், தற்போது, முதன் முதலாக, பிரீமியம் ஸ்போர்ட்ஸ் பைக் உற்பத்தியை துவக்கியுள்ளது. இதனால், பைக் ரசிகர்களிடம், எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. ‘மோஜோ’ என்னும் அந்த புதிய பைக்கில், 26 குதிரை சக்தி திறன் கொண்ட, 300 சி.சி., இன்ஜினை, மகிந்திரா பொருத்தியுள்ளது; இதன் எடை, 160 கிலோ.
மத்திய பிரதேச மாநிலம், பிதம்பூர் ஆலையில், ‘மோஜோ’வின் உற்பத்தி துவங்கிவிட்டது. இதில், ஸ்போர்ட்ஸ் பைக்குகளுக்கே உரித்தான, ‘ஹைஹேண்டில் பார்’, பெரிய பெட்ரோல் டேங்க், டிஸ்க் பிரேக் ஆகிய எல்லா அம்சங்களும் உண்டு. கரடுமுரடான இந்திய சாலைகளுக்கென, பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்டுள்ளது.
இந்த ஆண்டு இறுதிக்குள், சந்தைக்கு வர இருக்கும் இந்த பைக், ‘சுசுகி, ஹோண்டா’ போன்ற, பிற ஸ்போர்ட்ஸ் பைக்குகளின் தரத்துக்கு நிகராக இருக்கிறதா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.
மேலும் ஆட்டோமொபைல் செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|