பதிவு செய்த நாள்
01 செப்2015
16:27

ஹோண்டா நிறுவனம், பெட்ரோலில் இயங்கும், ‘சிஆர்-இசட்’ காரின் மேம்படுத்தப்பட்ட, ‘பெட்ரோ – எலக்ட்ரிக் ஹைப்ரிட்’ மாடல் காரின் தோற்றத்தை வெளியிட்டுள்ளது.
இந்த காரின் முன்புற, ‘பம்பர் கிரில்’ வடிவம் சிறிது மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. மாடல்களில், எல்.இ.டி., ஹெட்லைட்கள் பொருத்தப்பட்டுள்ளன. பின்புற, ‘பம்பர்’ வடிவமும், சற்று, மாற்றப்பட்டுள்ளது. அதில், காற்றின் போக்கை கட்டுப்படுத்தும், ‘டிப்யூசர்’ பொருத்தப்பட்டு உள்ளது. காரின் உள்புறத்தில், ‘ஹாண்ட்பிரேக் லீவருக்கு’ பதில், ‘எலக்ட்ரிக் சுவிட்ச்’ வைக்கப்பட்டுள்ளது.
இதனால், கைகளை ஓய்வாக வைத்துக்கொள்ளக்கூடிய, ‘ஸ்டோரேஜ் பாக்ஸ்’ பொருத்தும் வகையில், இடவசதி அதிகரித்துள்ளது. மற்றபடி, 1.5 லிட்டர் பெட்ரோல் இன்ஜின், இதிலும் தொடர்கிறது. இதன் சர்வதேச விற்பனை, விரைவில் துவங்கவுள்ளது. ‘ஐ20’ கார் ரசிகர்கள், இதன் இந்திய விஜயத்துக்கு காத்திருக்கின்றனர்.
மேலும் ஆட்டோமொபைல் செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|