பதிவு செய்த நாள்
01 செப்2015
16:30

மும்பை : இந்திய பங்குசந்தைகள் இன்றும்(செப்., 1ம் தேதி) கடும் சரிவை சந்தித்தன. சென்செக்ஸ் 587 புள்ளிகள் சரிந்தது. உலகளவில் பங்குசந்தைகளில் ஏற்பட்டுள்ள சரிவு மற்றும் நடப்பு நிதியாண்டின், முதல்காலாண்டில் நாட்டின் பொருளாதார வளர்ச்சி கடந்தாண்டை காட்டிலும் 7 சதவீதமாக குறைந்து இருப்பதும், இதன் வெளிப்பாடாக முதலீட்டாளர்கள் அதிகளவில் பங்குகளை விற்பனை செய்ததாலும் இன்றைய வர்த்தகம் கடும் சரிவுடன் முடிந்தன.
வர்த்தகநேர முடிவில் மும்பை பங்குசந்தையின் குறியீட்டு எண் சென்செக்ஸ் 568.65 புள்ளிகள் சரிந்து 25,696.44 புள்ளிகளிலும், நிப்டி 185.45 புள்ளிகள் சரிந்து 7,785.85 புள்ளிகளிலும் முடிந்தன.
இன்றைய வர்த்தகத்தில், 620 நிறுவன பங்குகள் உயர்வுடனும், 2604 நிறுவன பங்குகள் சரிந்தும், 100 நிறுவன பங்குகள் மாற்றமின்றியும் முடிந்தன. குறிப்பாக வங்கி தொடர்பான பங்குகள் 3.7 சதவீதமும், ஆட்டோமொபைல் நிறுவன பங்குகள் 2.5 சதவீதமும் சரிந்தன.
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|