பதிவு செய்த நாள்
09 செப்2015
11:40

‘பெரிதும் எதிர்பார்க்கப்படும், மகிந்திரா நிறுவனத்தின், டி.யு.வி., 100 கார், புனேவில் உள்ள அதன் உற்பத்தி ஆலையில் நாளை அறிமுகம் செய்யப்படுகிறது. மகிந்திரா நிறுவனம், முதல் முறையாக அறிமுகம் செய்யும், சிறிய ரக, எஸ்.யு.வி., வாகனமான, டி.யு.வி., 100 வாகனத்தின் தோற்றத்தைப் பற்றி, ரகசியம் காத்து வந்தது. முதல்முறையாக, அது, அதிகாரபூர்வமாக நாளை வெளியாகிறது. விநாயகர் சதுர்த்தி நாளில் டெலிவரி தரும் வகையில், முன்பதிவுகளை டீலர்கள் துவங்கி விட்டனர். ‘ஸ்கார் பியோ’ வாகனத்தில் இருப்பதுபோல இதில், ‘ஸ்டார்ட்-ஸ்டாப்’ போன்ற, ‘ஹைப்ரிட்’ தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட்டுள்ளது. அதாவது, சிக்னல்களில் வாகனத்தை நிறுத்தினால், உடனடியாக, இன்ஜினும் தானாக, ‘ஆப்’ ஆகிவிடும். பின், ‘கிளட்ச்’சில் கால் வைத்ததும், ‘ஸ்டார்ட்’ ஆகி விடும். இதனால், எரிபொருள் பெருமளவில் மீதமாகும். மேலும், ‘இகோ மோட்’ தொழில் நுட்பம், மைலேஜை அதிகரிக்க உதவும். இதன் விலை, 7.3 லட்சம் ரூபாயில் இருந்து துவங்கலாம்.
மேலும் ஆட்டோமொபைல் செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|