பதிவு செய்த நாள்
26 செப்2015
18:53
சமீபத்தில், டீசல் சிக்கனம் மிக்க, ‘சியாஸ் ஹைப்ரிட்’ டீசல் இன்ஜின் காரை அறிமுகப்படுத்திய மாருதி சுசூகி நிறுவனம், ‘சியாஸ்’ காரில், கூடுதலாக, சில பாதுகாப்பு அம்சங்களை சேர்த்து, இரண்டு புதிய மாடல்களை அறிமுகப்படுத்தி உள்ளது.
சியாஸ்- ‘வி.எக்ஸ்.ஐ., (ஓ)’ மற்றும், ‘விடிஐ (ஓ)’ என்ற அந்த இரு மாடல்களிலும், ஏ.பி.எஸ்., எனப்படும், ‘ஆன்டி -லாக் பிரேக்கிங் சிஸ்டம்’ மற்றும் விபத்து நேரும்போது, காரின் முன்இருக்கையில் அமர்ந்திருப்போரை, பின்னோக்கி தள்ளி, ‘ஏர் பேக்’ முழுவதுமாக விரிவடைந்து விபத்தின் தாக்கத்தை குறைக்க உதவும், ‘சீட் பெல்ட் பிரீ டென்ஷனர்’ மற்றும் ‘சீட் பெல்ட்’ அணிவதை டிரைவருக்கு நினைவூட்டும், ‘பஸ்ஸர்’ என, பல புதிய பாதுகாப்பு அம்சங்கள் சேர்க்கப்பட்டுள்ளன.
பெட்ரோல் மாடலான ‘விஎக்ஸ்ஐ (ஓ)’– வின் விலை, 7.31 லட்சம் ரூபாய்; ‘வி.டி.ஐ., (ஓ)’ விலை, 8.23 லட்சம் ரூபாய்.
மேலும் ஆட்டோமொபைல் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|