பதிவு செய்த நாள்
26 செப்2015
18:54
மெர்சிடெஸ் பென்ஸ் நிறுவனம், ‘மேபேக்’ பிரீமியம் சொகுசு கார்களை, இந்தியாவில் மீண்டும் அறிமுகப்படுத்தி உள்ளது. 2011-ல், இந்தக் காரின் உற்பத்தி நிறுத்தப்பட்டது. தற்போது மீண்டும், ‘எஸ் 500’ மற்றும், ‘எஸ் 600’ என்ற இரு மாடல்கள், அறிமுகம் செய்யப்பட்டுள்ளன.
இந்தியாவில் விற்பனையாகும் கார்களிலேயே, இதில் பொருத்தப்பட்டுள்ள, ‘வி12’ இன்ஜின் தான் மிகப்பெரியது. ‘எஸ் 600’ கார், வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்படுகிறது. ‘எஸ் 500’ ரக கார், இந்தியாவில் உள்ள ஆலையில், ‘அசெம்பிள்’ செய்யப்படுகிறது. ‘எஸ் 600’ காரில், 5,980 சி.சி., திறனுடைய, ‘வி12 பை டர்போ’ இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இதனால், 523 குதிரைசக்தி திறன் கிடைக்கிறது. இது, புறப்பட்ட ஐந்து வினாடிக்குள், 100 கி.மீ., வேகத்தை எட்டும். இதன் விலை, 2.6 கோடி ரூபாயில் இருந்து துவங்குகிறது. இந்த ஆண்டுக்கு உற்பத்தி செய்யப்பட உள்ள கார்கள் அனைத்தும் விற்றுத் தீர்ந்துவிட்டன. ‘எஸ் 500’ காரின் விலை, 1.67 கோடி ரூபாயில் இருந்து துவங்குகிறது.
மேலும் ஆட்டோமொபைல் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|