பதிவு செய்த நாள்
28 செப்2015
13:39

கார் விற்பனை சந்தை, கடும் போட்டி நிறைந்ததாக உருவெடுத்து உள்ளதால், ஒரு குறிப்பிட்ட மாடல் வாகனத்தில், கூடுதல் அம்சங்களை, மீண்டும் மீண்டும் புகுத்தி, புதுப்புது வகை கார்களை அறிமுகப்படுத்தும் போக்கும் அதிகரித்து உள்ளது.
நம்நாட்டில், அதிக எண்ணிக்கையில் கார்களை விற்பனை செய்யும் மாருதி சுசூகி, மற்ற நிறுவனங்களுக்கு, எப்போதுமே முன்னுதாரணமாக திகழ்ந்து வருகிறது. இந்நிறுவனம், அடுத்த ஐந்து ஆண்டுகளுக்குள், 15 புதிய மாடல்களை அறிமுகப்படுத்தப் போவதாக அறிவித்திருப்பது, அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது. ‘ஆண்டுக்கு, 30 லட்சம் கார்களை விற்க இலக்கு நிர்ணயித்து உள்ளோம்; அந்த இலக்கை அடைய வேண்டுமானால், புதிய அம்சங்களுடன் சிறிய, நடுத்தர மற்றும் எஸ்.யு.வி., கார்களை அறிமுகப்படுத்த வேண்டியது, அவசியம் என்பதை உணர்ந்துள்ளோம்’ என, மாருதி சுசூகி நிறுவனத்தின் உயரதிகாரி ஒருவர் தெரிவித்து உள்ளார்.
மேலும் ஆட்டோமொபைல் செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|