வர்த்தகம் » பொது
வங்கி கடன்களுக்கான வட்டி விகிதம் 0.50 சதவீதம் குறைப்பு
கருத்தைப் பதிவு செய்ய
பதிவு செய்த நாள்
29 செப்2015
11:11

மும்பை : வங்கி கடன்களுக்கான வட்டி வகிதத்தை 0.50 சதவீதம் குறைத்துள்ளது ரிசர்வ் வங்கி. பணவீக்கம் கடந்த நான்கு ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு சரிவை சந்தித்தது. இதன் காரணமாக வங்கி வட்டி விகிதங்கள் குறைக்கப்படலாம் என்ற எதிர்பார்ப்பு நிலவியது.
இந்நிலையில், மத்திய ரிசர்வ் வங்கியின் நிதிநிலை ஆய்வுக்கூட்டம் கவர்னர் ரகுராம் ராஜன் தலைமையில் நடந்தது. கூட்டத்தில் வங்கி கடன்களுக்கான வட்டி விகிதத்தை 0.50 சதவீதம் குறைக்கப்பட்டது. இதன்மூலம் 7.25 சதவீதத்திலிருந்து 6.75 சதவீதமாக வட்டி விகிதம் குறைந்துள்ளது. அதேசமயம் சிஆர்ஆர் எனப்படும் ரொக்க கையிருப்பு விகிதத்தில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை, ஏற்கனவே இருந்த 4 சதவீத்திலேயே நீடிக்கிறது.
மேலும் நடப்பாண்டுக்கான நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி 7.4 சதவீதமாக இருக்கும் என்றும், 2016, ஜனவரி மாதத்திற்குள் பணவீக்கம் 5.8 சதவீதத்திற்கு வரும் என்று ரிசர்வ் வங்கி சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே இந்த வட்டி குறைப்பு மூலம் தனிநபர் கடன், வீடு மற்றும் வாகன கடன்களுக்கான வட்டி வகிதம் குறைக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
Advertisement
மேலும் பொது செய்திகள்

சரிவைக் கண்ட எல்.ஐ.சி., பங்குகள்தள்ளுபடி விலையில் வர்த்தகம் செப்டம்பர் 29,2015
மும்பை, : எல்.ஐ.சி., நிறுவன பங்குகள், சந்தையில் நேற்று பட்டியலிடப்பட்ட நிலையில், அதன் விலை எதிர்பார்த்ததற்கு ... மேலும்

‘அதானி’ உடனான ஒப்பந்தத்துக்கு வரிப்பிடித்தம் இருக்காது: ஹோல்சிம் செப்டம்பர் 29,2015
புதுடில்லி : கவுதம் அதானி தலைமையிலான ‘அதானி’ குழுமத்துடன் போடப்பட்ட 49 ஆயிரத்து 129 கோடி ரூபாய் ஒப்பந்தத்துக்கு, ... மேலும்

பச்சை நிறத்துக்கு மாறியபங்குச் சந்தைகள் செப்டம்பர் 29,2015
மும்பை : பங்குச் சந்தைகள் நேற்று எதிர்பாராத அளவுக்கு ஏற்றத்தை கண்டன. மும்பை பங்குச் சந்தையின் குறியீடான ... மேலும்

மொத்தவிலை பணவீக்கம் 15.08 சதவீதமாக உயர்வு செப்டம்பர் 29,2015
புதுடில்லி : நாட்டின் மொத்தவிலை பணவீக்கம், கடந்த ஏப்ரலில், இதுவரை இல்லாத வகையில், 15.08 சதவீதமாக ... மேலும்

‘டுவிட்டர்’ ஒப்பந்தம்; தடை போட்ட மஸ்க் செப்டம்பர் 29,2015
லண்டன் : ‘டுவிட்டர்’ நிறுவனம், அதனிடம் 5 சதவீத அளவுக்கு மட்டுமே போலி மற்றும் ‘ஸ்பேம்’ கணக்குகள் இருப்பதற்கான ... மேலும்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!