பதிவு செய்த நாள்
05 அக்2015
16:33

மும்பை : இந்திய பங்குச்சந்தைகள் எழுச்சி கண்டுள்ளன. சென்செக்ஸ் 565 புள்ளிகள் உயர்வுடன் முடிந்தன. ஆசிய பங்குச்சந்தைகளில் காணப்பட்ட ஏற்றம் காரணமாக இன்றைய வர்த்தகம் துவங்கும்போதே கணிசமான உயர்வுடன் ஆரம்பித்தன. தொடர்ந்து முதலீட்டாளர்கள் அதிகளவில் பங்குகளை வாங்கியதால் இன்றைய வர்த்தகம் அதிக ஏற்றத்துடன் முடிந்தன. இந்தாண்டில் இரண்டாவது முறையாக பங்குச்சந்தைகள் அதிக ஏற்றத்துடன் முடிந்துள்ளன.
வர்த்தகநேர முடிவில் மும்பை பங்குச்சந்தையின் குறியீட்டு எண் சென்செக்ஸ் 564.60 புள்ளிகள் உயர்ந்து 26,785.55-ஆகவும், தேசிய பங்குச்சந்தையின் நிப்டி 168.40 புள்ளிகள் உயர்ந்து 8,119.30-ஆகவும் முடிந்தன.
இன்றைய வர்த்தகத்தில், 1998 நிறுவன பங்குகள் உயர்வுடனும், 795 நிறுவன பங்குகள் சரிவுடனும், 97 நிறுவன பங்குகள் மாற்றமின்றியும் முடிந்தன.
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|