தங்கம் விலை இன்று(அக்.8) காலைநிலவரப்படி ரூ.96 சரிவுதங்கம் விலை இன்று(அக்.8) காலைநிலவரப்படி ரூ.96 சரிவு ... இந்திய ரூபாயின் மதிப்பு இன்று(அக்.9) உயர்வு - ரூ.64.77 இந்திய ரூபாயின் மதிப்பு இன்று(அக்.9) உயர்வு - ரூ.64.77 ...
வர்த்தகம் » ஆட்டோமொபைல்
போர்டு: புதிய அறிமுகம் ‘இகோஸ்போர்டு’
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

08 அக்
2015
17:58

போர்டு நிறுவனத்தின் வெற்றிகர அறிமுகமான, ‘இகோஸ்போர்டு’ எஸ்.யு.வி., வாகனத்தின் புதிய மேம்படுத்தப்பட்ட மாடல் சந்தைக்கு வந்துள்ளது. ‘‘இகோஸ்போர்டு வாகனம், இரண்டு லட்சத்தையும் கடந்து அதிக அளவில் விற்பனையாகி வருகிறது. இந்நிலையில், அதை மேலும் செம்மைப்படுத்தும் விதமாக, மேம்படுத்தப்பட்ட மாடலை, பண்டிகை காலத்தை கருத்தில் கொண்டு களமிறக்கியுள்ளோம்,’’ என, போர்டு இந்தியா தலைவர், நிகில் ஹேரிஸ் கூறியுள்ளார்.
இதில், தற்போதைய இகோஸ்போர்டு வாகனத்தில் பயன்படுத்தப்படும், அதே, 1.5 லிட்டர், டி.டி.சி.ஐ., இன்ஜினை, மேலும் வலுவுள்ளதாக மாற்றி, பொருத்தப்பட்டுள்ளது. ‘இதில், உலக பிரசித்தி பெற்ற, ‘இகோபூஸ்ட்’ தொழில்நுட்பத்தை பயன்படுத்தியிருப்பதால், ஒரு லிட்டர் டீசலுக்கு, 22.7 கி.மீ., மைலேஜ் கிடைக்கும்’ என, போர்டு இந்தியா நிறுவனம் தெரிவித்துள்ளது.
இதுபோல், பெட்ரோல் மாடல், 1.5 லிட்டர் டி.ஐ.வி.சி.டி., இன்ஜின், லிட்டருக்கு, 15.85 கி.மீ., மைலேஜ் தரக்கூடியது. பண்டிகைகக்காக, ‘கோல்டன் பிரவுன்’ என்னும் புதிய வண்ணமும், அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
வெளிச்சம் குறையும்போது தானாக எரியக்கூடிய, ‘ஆட்டோமேட்டிக் ஹெட்லேம்ப், சிக்னேச்சர் லைட்’ மழை வருவதை அறிந்து தானாக இயங்கும், ‘வைப்பர்’ மற்றும், ‘லெதர் சீட்’ பின்புற வாகனங்களின் முகப்பு விளக்கு வெளிச்சம், டிரைவரின் கவனத்தை சிதற விடுவதைத் தடுக்கும் வகையில், ‘எலக்ட்ரோ குரோமிங் ரியர்வியூ மிரர்’ பொருத்தப்பட்டிருப்பது சிறப்பு.

Advertisement

மேலும் ஆட்டோமொபைல் செய்திகள்

business news
மும்பை, : எல்.ஐ.சி., நிறுவன பங்குகள், சந்தையில் நேற்று பட்டியலிடப்பட்ட நிலையில், அதன் விலை எதிர்பார்த்ததற்கு ... மேலும்
business news
புதுடில்லி : கவுதம் அதானி தலைமையிலான ‘அதானி’ குழுமத்துடன் போடப்பட்ட 49 ஆயிரத்து 129 கோடி ரூபாய் ஒப்பந்தத்துக்கு, ... மேலும்
business news
மும்பை : பங்குச் சந்தைகள் நேற்று எதிர்பாராத அளவுக்கு ஏற்றத்தை கண்டன. மும்பை பங்குச் சந்தையின் குறியீடான ... மேலும்
business news
புதுடில்லி : நாட்டின் மொத்தவிலை பணவீக்கம், கடந்த ஏப்ரலில், இதுவரை இல்லாத வகையில், 15.08 சதவீதமாக ... மேலும்
business news
லண்டன் : ‘டுவிட்டர்’ நிறுவனம், அதனிடம் 5 சதவீத அளவுக்கு மட்டுமே போலி மற்றும் ‘ஸ்பேம்’ கணக்குகள் இருப்பதற்கான ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)