பதிவு செய்த நாள்
14 அக்2015
12:59
‘ஹீரோ மோட்டார் கார்ப்’ நிறுவனமும் தன் பங்குக்கு, ஒரு பட்ஜெட் பைக்கை, இந்த பண்டிகை சீசனுக்காக களமிறக்கி உள்ளது. நவராத்திரி பண்டிகை துவக்கத்தின் முதல் நாளான நேற்று, இந்த பைக் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதில், ‘ஏர் கூல்டு 4 ஸ்டிரோக் சிங்கிள் சிலிண்டர்’ உடைய, ஏ.பி.டி.வி., இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. நான்கு கியர்கள் உடைய இந்த பைக்கில், ‘அட்ஜெஸ்ட்’ செய்யக்கூடிய பின்புற, ‘ஷாக் அப்சர்வர்’ மற்றும், 18 அங்குல விட்டம் உடைய, ‘அலாய் ரிம்’ போன்ற அம்சங்கள் உண்டு. பைக், நான்கு பிரிவுகளில் அறிமுகமாகி உள்ளது; அவற்றில் ஒன்றில், ‘செல்ப் ஸ்டார்ட் ’ அம்சம் உடையது. ‘ஷீல்ட் கோல்ட்’ மற்றும், ‘பிளாக் ரெட்’ என, இரண்டு புதிய நிறங்கள் உட்பட, எட்டு நிறங்களில் கிடைக்கின்றன. டில்லியில், இதன் ஷோரூம் விலை, 46 ஆயிரத்து, 850 ரூபாய்.
மேலும் ஆட்டோமொபைல் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|