பதிவு செய்த நாள்
24 அக்2015
17:51
போக்ஸ்வேகன் நிறுவனம், புதிய வாடிக்கையாளர்களுக்கு, ‘விடுமுறை சுற்றுலா சலுகை, ‘டெஸ்ட் டிரைவ்’ செய்வோருக்கு நிச்சய பரிசு’ என, ஏராளமான சலுகைகளை, ஒருமாத காலத்துக்கு அறிவித்துள்ளது.
புதிய கார் வாங்குவோருக்கு, கடன் உதவிகளையும் வழங்குகிறது. சமீபத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட, ‘வென்ட்டோ ஹைலைன் பிளஸ்’ காரை வாங்குவோருக்கு, ஓராண்டு இலவச இன்சூரன்ஸ் சலுகையையும் வழங்குகிறது.
போக்ஸ்வேகன் கார்களை, ‘எக்ஸ்சேஞ்ச்’ செய்து புதிய காரை வாங்குவோருக்கு, 40 ஆயிரம் ரூபாய் வரை, ‘எக்ஸ்சேஞ்ச், லாயல்டி போனஸ்’ வழங்கப்படுகிறது. ‘போலோ’ ரக கார்களுக்கு, ஆண்டுக்கு, 3.99 சதவீதம்; ‘வென்ட்டோ’ ரக கார்களுக்கு, 9.75 சதவீதம் என்ற வட்டியில் கடன் உதவி வழங்குகிறது. இச்சலுகை, ஒருமாத காலத்துக்கு இந்தியா முழுதும் அமலில் இருக்கும்.
மேலும் ஆட்டோமொபைல் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|