பதிவு செய்த நாள்
13 நவ2015
16:13
மழை காலத்தில், பைக் ஓட்டுபவர்களுக்கு சிக்கல் அதிகம். சில வழிமுறைகளை கையாண்டால், மழை காலத்தை கவலையின்றி எதிர்கொள்ளலாம்.
மழையில் நிறுத்த வேண்டியிருந்தால், சாவி துவாரத்தை மூட வேண்டும்; இல்லையெனில், பைக், ‘ஸ்டார்ட்’ ஆகாது
பைக் மேற்புறம் துருப்பிடிக்காத வகையில், விலை குறைவான, ‘ஆன்டி-ரஸ்ட்’ பூச்சு, மழை காலத்தில் கைகொடுக்கும்
பைக்கில் டயர் தேயாமலும், காற்று சரியான அளவிலும் இருக்க வேண்டும். இல்லாவிடில், ‘பிரேக்’ பிடிக்கும் போது நிலை தடுமாறி விழும் அபாயம் உள்ளது
மழை நீர் அமிலத்தன்மை உடையது என்பதால், பைக்கில் மழை நீர் படாதபடி மூடி வைக்க வேண்டும்
வெயில் காலத்தில், டயரில் காற்று விரிவடையும்; மழை காலத்தில் காற்று சுருங்கும். அதனால், மழை காலத்தில் காற்றின் அளவை சிறிது அதிகரிக்கலாம்
காற்றில் ஈரப்பதம் அதிகமாக இருப்பதால், ‘ஏர் பில்டரில்’ அடைப்பு ஏற்படக்கூடும்.
‘டிஸ்க் பிரேக், டிரம் பிரேக்’ என, எதுவாக இருந்தாலும், பிரேக் சரியாக வேலை செய்கிறதா என, பரிசோதித்து பார்த்த பிறகு புறப்படுவது உசிதம்.
ஓட்டுவோர் கவனத்துக்கு...
சாலைகள் ஈரமாக இருந்தால், ‘பிரேக்’ பிடித்தால் வழுக்கி விடும். அதனால், வழக்கத்தை விட வேகம் குறைவாக சென்றால், பிரச்னை ஏற்பட்டாலும் சமாளிக்கலாம் முக்கியமாக, ஸ்கூட்டரில் உள்ள சிறிய சக்கரம் எளிதில் வழுக்கி விடும் என்பதால் கூடுதல் கவனம் தேவை
வாகனத்தின் முன்னும் பின்னும் அதிக இடைவெளி இருக்கும் வகையில், பைக் ஓட்டவேண்டும்.
கார்களில் பக்கவாட்டு கண்ணாடிகள் மங்கலாகி, ஓட்டுனருக்கு சாலை சரியாக தெரியாது; அதனால், கார்களை கடக்கும் போது எச்சரிக்கை தேவை
பெரிய வாகனங்கள் வேகமாக செல்லும் போது, பைக் ஓட்டிகள் மீது சேற்று நீர் தெரிக்கும். அதற்காகவாவது, மழை கோட் அணிய வேண்டும்
‘ஹாரன்’ மற்றும் முகப்பு விளக்கு மிகவும் முக்கியம் என்பதால், பேட்டரி பராமரிப்பு மிகவும் அவசியம்
சாலையில் திரும்பும் முன் சிக்னல் செய்தால், பின்னால் வருவோருக்கு சரியாக தெரியாது. அதனால், ‘இண்டிகேட்டர்’ பழுதில்லாமல் பார்த்து கொள்ள வேண்டும்
பைக்கில் பெட்ரோல் அளவு, ‘ரிசர்வ்’ நிலைமைக்கு போகாமல் பார்த்து கொள்ள வேண்டும்.
மேலும் ஆட்டோமொபைல் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|