பதிவு செய்த நாள்
14 நவ2015
17:41
புதுடில்லி:தங்கம் மற்றும் வெள்ளியின் இறக்குமதி மதிப்பை, மத்திய அரசு குறைத்துள்ளது. இதன்படி, 10 கிராம் தங்கத்தின் இறக்குமதி மதிப்பு, 373 டாலரில் இருந்து, 354 டாலராகவும், வெள்ளியின் மதிப்பு, 517 டாலரில் இருந்து, 470 டாலராகவும் குறைக்கப்பட்டுள்ளது.
சர்வதேச சந்தை நிலவரப்படி, இரு வாரங்களுக்கு ஒருமுறை, தங்கம், வெள்ளி ஆகியவற்றுக்கான, இறக்குமதி மதிப்பு நிர்ணயிக்கப்படுகிறது. இந்த மதிப்பின் அடிப்படையில், தங்கம், வெள்ளி மீது, சுங்க வரி வசூலிக்கப்படும். இறக்குமதி மதிப்பை குறைத்து காட்டி, சுங்க வரி ஏய்ப்பு நடப்பதை தடுக்க, இத்தகைய நடைமுறை பின்பற்றப்படுகிறது. செப்டம்பரில், தங்கம் இறக்குமதி, 200 கோடி டாலராக குறைந்துள்ளது. இது, கடந்த ஆண்டு, இதே மாதத்தில், 378 கோடி டாலராக இருந்தது.ஒரு அமெரிக்க டாலர், இந்திய ரூபாய் மதிப்பில், 66 ஆக உள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|