பதிவு செய்த நாள்
19 நவ2015
13:04

டொயோட்டா நிறுவனம் சத்தமின்றி, ‘கரோல்லா ஆல்டிஸ்’ மாடல் காரின் மேம்படுத்தப்பட்ட மாடலை அறிமுகம் செய்துள்ளது. இது, குறுகிய கால விற்பனைக்காக விசேஷமாக அறிமுகம் ஆகியுள்ளது. கரோல்லா காரின் தற்போதைய மாடலை விட, இதில் சில கூடுதல் அம்சங்கள் புதிதாக சேர்க்கப்பட்டுள்ளன.
‘ஸ்மார்ட்’ தொடுதிரை திசை காட்டும் கருவி, ‘ஸ்மார்ட் போன்’ உதவியுடன் திசை மற்றும் சாலைகளை அறியும் வசதி போன்றவை புதிதாக சேர்க்கப்பட்டுள்ளன. காரின் வெளிப்புறத்திலும் சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.
காரின் இருக்கைகளில், ‘குறுகிய கால விற்பனைக்காக தயாரிக்கப்பட்டது’ என்பதை குறிக்கும் வகையில், ‘லிமிடெட்’ என்ற எழுத்து இடம் பெற்றுள்ளது. இதில், டீசல் மாடலின் ஷோரூம் துவக்க விலை, 16 லட்சம் ரூபாய்; பெட்ரோல் மாடலின் துவக்க விலை, 14.86 லட்சம் ரூபாய்.
மேலும் ஆட்டோமொபைல் செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|