பதிவு செய்த நாள்
27 நவ2015
15:18

ஹுண்டாய் நிறுவனத்தின், ‘எலீட் ஐ20’ கார் அமோக வரவேற்பை பெற்றிருப்பதாக அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது. ‘பிரிமியம் ஹேட்ச்பேக்’ வகையைச் சேர்ந்த இந்த காரை, 2014ல் அறிமுகப்படுத்தியதில் இருந்து இதுவரை, 1.5 லட்சத்துக்கும் மேற்பட்ட வாடிக்கையாளர் வாங்கியுள்ளனர்.
இது பற்றி ஹுண்டாய் மோட்டார் இந்தியா நிறுவனத்தின் விற்பனை பிரிவு முதுநிலை துணைத் தலைவர் ராகேஷ் ஸ்ரீவத்சவா கூறும்போது, ‘‘இந்த காருக்கு கிடைத்திருக்கும் வரவேற்பு பெரும் மகிழ்ச்சியை அளித்துள்ளது.
ஹுண்டாய் மீது வாடிக்கையாளர் வைத்திருக்கும் நம்பிக்கையை இது காட்டுவதாக உள்ளது,’’ என தெரிவித்துள்ளார். ஐரோப்பாவில் தயாரிக்கப்படும் கார்களின் தோற்றத்தில் காணப்படும், எலீட் ஐ20 கார், தானியங்கி, ‘ஹெட்லேம்ப், ரிவர்சிங் கேமரா, ரியர் வியூ மிரர்’ என, பல சிறப்பு அம்சங்களை கொண்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் ஆட்டோமொபைல் செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|