பதிவு செய்த நாள்
21 ஜன2016
14:22
பஜாஜ் நிறுவனம், சமீபத்தில், ‘அவெஞ்சர்ஸ்’ பைக் வரிசையில், ‘ஸ்ட்ரீட் 150, குரூய்ஸ் 220, ஸ்ட்ரீட் 220’ ஆகிய, மூன்று பைக்குகளை அறிமுகம் செய்தது. அவெஞ்சர் வரிசையில் முதல்முறையாக, 150 சி.சி., இன்ஜினுடன், ‘ஸ்ட்ரீட்’ மாடல் அறிமுகமானது. ‘குரூய்ஸ் 220’ பைக், நீண்ட துாரம் பயணம் செய்வோரை குறிவைத்து, அறிமுகப்படுத்தப்பட்டது.
‘ஸ்ட்ரீட் 220’ மற்றும், ‘ஸ்ட்ரீட் 150’ பைக்குகள், வார இறுதி நாட்களில், விடுமுறையை கழிக்க, நீண்ட தூரம் பைக் ஓட்டிச் செல்வோரைக் கவர்ந்துள்ளன. ‘இத்தகைய வசதி கொண்ட, ‘க்ரூய்ஸ்’ பைக்குகள் இதுவரை வந்ததில்லை’ என, பஜாஜ் நிறுவனம் தெரிவித்துள்ளது. ‘ஸ்ட்ரீட் 150’ விலை, 74 ஆயிரத்தில் இருந்தும், ‘குரூய்ஸ்’ மற்றும் ‘ஸ்ட்ரீட்’ ஆகிய, 220 சி.சி., பைக்குகளின் விலை, 84 ஆயிரத்தில் இருந்தும் துவங்குகிறது.
மேலும் ஆட்டோமொபைல் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|