பதிவு செய்த நாள்
23 ஜன2016
12:47

புதுடில்லி: பெட்ரோல், டீசல் மீதான உற்பத்தி வரியை, மேலும் உயர்த்த, மத்திய அரசு முடிவு செய்துள்ளது. சர்வதேச சந்தையில், கச்சா எண்ணெய் விலைக்கு ஏற்ப, பெட்ரோல், டீசல் விலையை, எண்ணெய் நிறுவனங்களே, 15 நாட்களுக்கு ஒரு முறை நிர்ணயம் செய்து வருகின்றன. சர்வதேச சந்தையில், கச்சா எண்ணெய் விலை, கடந்த, 13 ஆண்டுகளாக இல்லாத அளவில், பேரல் ஒன்றுக்கு, 1,943 ரூபாயாக குறைந்துள்ளது. ஆனால், பெட்ரோல், டீசல், விலையை, எண்ணெய் நிறுவனங்கள் அதற்கேற்ப குறைக்கவில்லை.
இந்நிலையில், கடந்த இரண்டு மாதத்தில் மட்டும், பெட்ரோல், டீசல் உற்பத்தி வரியை, மத்திய அரசு நான்குமுறை உயர்த்தி, விலையை குறைய விடாமல் செய்துள்ளது. வரும், 2016 - 17ம் நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட், அடுத்த மாதம் தாக்கல் செய்யப்பட உள்ள நிலையில், அதற்கு முன், பெட்ரோல், டீசல் மீதான உற்பத்தி வரியை, மேலும் உயர்த்த, மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
இதற்கான காரணங்களாக, மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்ததாவது:* நடப்பு நிதியாண்டுக்கானநிதிப்பற்றாகுறையை, 3.9 சதவீதமாக குறைக்க அரசு விரும்புகிறது * பொதுத்துறை நிறுவனங்களில், அரசுக்கான பங்குகளை விற்பதன் மூலம், 69 ஆயிரத்து, 500 கோடி ரூபாய் திரட்ட, அரசு இலக்கு நிர்ணயித்துள்ளது; ஆனால், இதுவரை, 12 ஆயிரத்து, 500 கோடி ரூபாய் தான் கிடைத்துள்ளது; மார்ச் 31க்குள் இலக்கை அடைய வாய்ப்பில்லை * நேரடி வரி வசூலிலும், 40 ஆயிரம் கோடி ரூபாய், பற்றாக்குறை ஏற்படும் என தெரிகிறது. இந்த காரணங்களால் தான், பெட்ரோல், டீசல் மீதான உற்பத்தி வரியை அதிகரிக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|