பதிவு செய்த நாள்
13 பிப்2016
12:41

திண்டுக்கல்: நாடு முழுவதும் கடந்த ஓராண்டுக்கும் மேலாக விலை உயர்ந்திருந்த துவரம் பருப்பு மூடைக்கு ரூ.5 ஆயிரம் குறைந்தது.அதிகபட்சமாக துவரம் பருப்பு ஒரு கிலோ ரூ.210 க்கும், பாக்கெட்டில் அடைத்து விற்கப்படும் துவரம் பருப்பு கிலோ ரூ.225 முதல் ரூ.230 க்கும் விற்க்கப்பட்டது.இந்த விலை உயர்வை கட்டுப்படுத்த மத்திய அரசு வெளிநாட்டில் இருந்து 5 ஆயிரம் முதல் 10 ஆயிரம் டன் வரை துவரம் பருப்பை இறக்குமதி செய்தது.
இது மட்டுமின்றி விலையேற்றத்திற்கு காரணமான, பதுக்கி வைத்திருந்த பருப்பு மூடைகளை வெளி கொண்டுவர நாடு முழுவதும் தீவிர சோதனை நடத்தப்பட்டது. இச்சோதனையின் முடிவாக 20ஆயிரம் டன்னிற்கும் மேல் துவரம் பருப்பு மூடைகள் பதுக்கி வைத்திருந்தது கண்டு பிடிக்கப்பட்டது. இதன் விளைவாக உச்சத்தில் இருந்த துவரம் பருப்பின் விலை குறைய துவங்கியது. இதனால் மக்கள் பெரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
ஒரு கிலோ பருப்பு ரூ.200 க்கும், பாக்கெட் துவரம் பருப்பு ரூ.215 முதல் ரூ.210 க்கும் விற்றது. நாடு முழுவதும் போதுமான அளவிற்கு அரசு துவரம் பருப்பை வினியோகம் செய்தது. இதனால் சென்ற வாரம் ஒரு கிலோ ரூ.180 க்குவிற்றது. நேற்று முன்தினம் ரூ.160 க்கும், நேற்று ரூ.20 குறைந்து ரூ.140 க்கு விற்பனையாகிறது. அதாவது 50 கிலோ மூடைக்கு ரூ.17 ஆயிரம் வரை விற்ற பருப்பு மூடை, சென்ற மாதம் ரூ.16 ஆயிரத்திற்கும், தற்போது ரூ.5 ஆயிரம் வரை குறைந்து, மூடை ரூ.10 ஆயிரம் வரைகூட விற்கிறது.
திண்டுக்கல்லிற்கு தினமும் விருதுநகர், சேலம் மாவட்டங்களில் இருந்து துவரம் பருப்பு 10 டன்னும், உருட்டு பருப்பு, பாசி பருப்பு போன்றவை 9 டன் இறக்குமதியாகிறது.வர்த்தகர் சங்க செயலாளர் பாலன் கூறுகையில்,“பதுக்கி வைத்திருந்த 20 ஆயிரம் டன் துவரம் பருப்பை வெளிக் கொண்டு வந்ததாலும், வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டதாலும் விலை குறைந்துள்ளது. இன்னும் குறைய வாய்ப்புள்ளது” என்றார்.
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|