‘கார்டு பேமன்ட்:’ இள­வ­யது வணி­கர்கள் ஆத­ரவு‘கார்டு பேமன்ட்:’ இள­வ­யது வணி­கர்கள் ஆத­ரவு ... திண்டுக்கல்லில் கத்தரிக்காய் விலை சரிவு திண்டுக்கல்லில் கத்தரிக்காய் விலை சரிவு ...
கட்­டு­மான பொருள்: இந்­தி­யாவில் சிமென்ட் தேவை 3 ஆண்­டு­களில் அதி­க­ரிக்கும்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

15 ஏப்
2016
07:26

மும்பை : ‘‘சிமென்ட் துறை, பல்­வேறு சவால்­களை சந்­தித்து வரு­கிற போதிலும், அடுத்த, 3 – 5 ஆண்­டு­களில், உள்­நாட்டில் சிமென்ட் தேவை, குறிப்­பி­டத்­தக்க அள­விற்கு அதி­க­ரிக்கும்,’’ என, ஏ.சி.சி., சிமென்ட் நிறு­வ­னத்தின், தலைமை செயல் அதி­கா­ரியும், நிர்­வாக இயக்­கு­ன­ரு­மான ஹரிஷ் பதாமி தெரி­வித்­துள்ளார்.
மும்­பையில் நடை­பெற்ற, ஏ.சி.சி., நிறு­வ­னத்தின், 80ம் ஆண்டு பொதுக்­கூட்­டத்தில் அவர் பேசி­ய­தா­வது:கடந்த, 2015ம் ஆண்டு, சிமென்ட் துறை கடு­மை­யான சவால்­களை சந்­தித்­தது. சிமென்ட் விலையில் ஏற்­பட்ட சரிவு, தேவைப்­பாடு குறைந்­தது, உபரி கையி­ருப்பு என, பல்­வேறு இடர்­பா­டு­களை, சிமென்ட் நிறு­வ­னங்கள் எதிர்­கொண்­டன. ஒட்­டு­மொத்­த­மாக, சிமென்ட் துறை மந்த நிலையில் இருந்­தது.
மந்த நிலை சிமென்ட் தேவை, 2 சத­வீதம் என்ற அள­விற்கே உயர்ந்­தது. சிமென்ட் நிறு­வ­னங்கள், அவற்றின் முழு உற்­பத்தி திறனை பயன்­ப­டுத்த முடி­யாத நிலைக்குத் தள்­ளப்­பட்­டன. இத்­துடன், சுண்­ணாம்பு சுரங்க குத்­தகை புதுப்­பிப்பு, நிலக்­கரி ஒதுக்­கீடு ஆகி­யவை தொடர்­பான அரசு கொள்­கை­களில் செய்­யப்­பட்ட மாற்­றங்­களும், சிமென்ட் துறையை மந்த நிலைக்கு ஆளாக்­கின. இந்­நி­லையில், நடப்பு நிதி­யாண்டில், மொத்த உள்­நாட்டு உற்­பத்தி, 7 – 8 சத­வீதம் வளர்ச்சி காணும் என்ற மதிப்­பீடு, சிமென்ட் துறைக்கு புத்­துயிர் அளிக்கும். அடுத்த, 3 – 5 ஆண்­டு­களில், மொத்த உள்­நாட்டு உற்­பத்தி வளர்ச்­சிக்கு ஏற்ப, சிமென்ட் தேவை உயரும் என, எதிர்­பார்க்­கப்­ப­டு­கி­றது.
இதை கருத்தில் கொண்டு, ஏ.சி.சி., புதிய தொழிற்­பி­ரி­வுகள் அமைக்கும் பணியை முடுக்கி விட்­டுள்­ளது. சத்­தீஸ்கர் மாநிலம், ஜமுல் நகரில், நிறு­வ­னத்தின் புதிய, ‘கிளிங்கர்’ ஆலை, அடுத்த சில தினங்­களில் செயல்­படத் துவங்கும். இந்­ந­க­ரிலும், ஜார்க்கண்ட் மாநிலம், சிந்­தி­ரி­யிலும் அமைக்­கப்­பட்டு வரும், சிமென்ட் அரவை ஆலை­களும் விரைவில், செயல்­படத் துவங்கும்.
பங்களிப்புசிமென்ட் துறை மந்த நிலையில் உள்ள போதிலும், கடந்த ஆண்டு, ஏ.சி.சி., 77 சத­வீத உற்­பத்தி திறனில் செயல்­பட்­டுள்­ளது. இது, சிமென்ட் துறையின் சரா­ச­ரியை விட, 4 சத­வீதம் அதி­க­மாகும்.கடந்த, 2015ல், பிரான்சின், லபார்ஜி, சுவிட்­சர்­லாந்தின் ஹோல்சிம் ஆகி­யவை இணைந்து, லபார்­ஜி­ஹோல்சிம் என்ற, உலகின், ‘நம்பர் 1’ சிமென்ட் நிறு­வ­னத்தை உரு­வாக்­கி­யுள்­ளன. இந்­நி­று­வனம், 90 நாடு­களில், 1,500 சிமென்ட் கலவை ஆலை­க­ளையும், 200 சிமென்ட் தொழிற்­சா­லை­க­ளையும் கொண்­டுள்­ளது. இந்­நி­று­வ­னத்தின் மிகப் பெரிய துணை நிறு­வ­ன­மாக, ஏ.சி.சி., விளங்­கு­கி­றது. இதன் மூலம், ஏ.சி.சி., சர்­வ­தேச சிமென்ட் துறைக்கு, குறிப்­பி­டத்­தக்க பங்­க­ளிப்பை வழங்கி வரு­கி­றது. இவ்­வாறு அவர் கூறினார்.
தனி நபர் பயன்­பாடுஇந்­தி­யாவில், தனி நபர் சிமென்ட் பயன்­பாடு, 207 கிலோ என்ற அளவில் உள்­ளது; இது, சர்­வ­தேச சரா­ச­ரி­யான, 540 கிலோவை விட, மிகவும் குறை­வாகும்.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)