பதிவு செய்த நாள்
26 மே2016
12:46

மூன்று மாநிலங்களில் காய்கறி விளைச்சல் சரிந்துள்ளதால், தமிழகத்தில் அவற்றின் விலை பல மடங்கு அதிகரித்துள்ளது; இதனால், விற்பனையும் சரிந்து உள்ளது. தமிழகத்தில், திண்டுக்கல், கிருஷ்ணகிரி, நீலகிரி, திருவண்ணாமலை, வேலூர் உள்ளிட்ட பல மாவட்டங்களில், 6 லட்சம் ஏக்கரில் காய்கறி சாகுபடி செய்யப்படுகிறது; ஆண்டுக்கு, 75 லட்சம் டன் காய்கறி உற்பத்தியாகிறது.
தமிழகத்தில் உற்பத்தியாகும் காய்கறிகள், கேரள மாநில தேவைக்காகவும் அனுப்பி வைக்கப்படுகின்றன. தேவை அதிகரிப்பு அதே நேரத்தில், தமிழகத்தில் உற்பத்தியாகும் காய்கறிகளை விட, தேவை இரு மடங்குக்கு மேல் அதிகரித்துள்ளது. இதனால், கர்நாடகா, ஆந்திராவில் இருந்து காய்கறிகள் எடுத்து வரப்பட்டு தமிழகத்தின் தேவை பூர்த்தி செய்யப்படுகிறது.
* தென் மேற்கு பருவமழை துவங்கிய பின், கர்நாடக மாநிலத்தில் காய்கறி சாகுபடி துவங்கும் * தமிழகத்திலும், ஆந்திராவிலும், கோடை வெயில் முடிந்த பின்னரே, காய்கறி சாகுபடியில் விவசாயிகள் ஆர்வம் காட்டுவர். இதனால், மூன்று மாநிலங்களிலும் தற்போது, காய்கறி விளைச்சல் வெகுவாகக் குறைந்து, விலை கடுமையாக அதிகரித்துள்ளது. வெங்காயம், கத்தரிக்காய் உள்ளிட்ட சில காய்கறிகளின் விலை மட்டுமே, ஆறுதல் அளிக்கும் வகையில் உள்ளது. காய்கறி விலை அதிகரிப்பால், அவற்றின் பயன்பாட்டை குறைக்கும் நடவடிக்கைகளை, பொதுமக்கள் கையில் எடுத்துள்ளனர்.
விற்பனை குறைந்தது : பெரிய ஓட்டல்களில் துவங்கி, சாலையோர கடைகள் வரை, காய்கறிகள் பயன்பாடு வெகுவாகக் குறைந்துள்ளது. இதனால், சென்னை உள்ளிட்ட பல மாவட்ட மார்க்கெட்களில் காய்கறி விற்பனை குறையத் துவங்கியுள்ளது.
ஆர்வம் இல்லாத விவசாயிகள் : சென்னை, கோயம்பேடு மார்க்கெட்டிற்கு தினமும், 350 லாரிகளில் காய்கறிகள் வரும். தற்போது தமிழகத்தில், காய்கறி விளைச்சல் இல்லை. காய்கறிகள் சாகுபடியில் விவசாயிகளுக்கு ஆர்மில்லை. அரசு தரும் இலவசங்களை வைத்து பிழைப்பை ஓட்டலாம் என்ற மனநிலைக்கு அவர்கள் வந்து விட்டனர். போதாக்குறைக்கு பயிர்க்கடன் தள்ளுபடியும் அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே, காய்கறி உற்பத்தி மேலும் குறையலாம். கர்நாடகா, ஆந்திர மாநிலங்களில் இருந்து, 200 லாரிகளில் மட்டுமே சென்னைக்கு காய்கறி வரத்து உள்ளது. திருச்சி, மதுரை, கோவை உள்ளிட்ட மற்ற முக்கிய மாவட்டங்களிலும் இதே நிலை தான். வாகன வாடகை உள்ளிட்ட காரணங்களால், காய்கறி விலை அதிகரித்துள்ளது; விலை கட்டுக்குள் வர, இன்னும், இரண்டு மாதமாகும்.
சவுந்தர்ராஜன், ஆலோசகர், சென்னை கோயம்பேடு மார்க்கெட் காய்கறி மொத்த வியாபாரிகள் சங்கம்.
-- நமது சிறப்பு நிருபர் - -
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|